ஆபாச பட விவகாரம் குறித்து போலீஸ் முழு விவரம்.! அந்த லிஸ்ட்ல அரசியல்வாதிகளுமா.?!  - Seithipunal
Seithipunal


காவல்துறையினர் தமிழகத்தில் ஆபாசப்படம் பார்ப்பவர்கள் பட்டியல் கிடைத்திருப்பதாகவும், அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிவித்த நிலையில், பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. ஆன்லைனில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்போரின் பட்டியலில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக இந்திய தூதரகத்திற்கு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் பட்டியலை அனுப்பியது.

இந்நிலையில் அவர்களின் ஐபி அட்ரஸ்ஸை வைத்து யார் என்பது குறித்து காவல்துறையினர் கையில் பட்டியல் இருக்கின்றது. இந்நிலையில், நெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு காவல்துறையினர் போன் செய்ததாக கூறி, மர்ம நபர் ஒருவர் ஆபாச படம் பார்த்த குற்றத்திற்காக கைது செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த ஆடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.

இது குறித்து காவல்துறையினர் தற்பொழுது விளக்கம் அளித்து இருக்கின்றனர். அதில், "18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் வீடியோக்களை பார்ப்பவர்கள் மற்றும் சேமித்து வைத்து இருப்பவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம். காவல்துறையினர் யாரையும் போன் செய்து மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை.

சம்மன் அனுப்பி விசாரிக்க மட்டுமே திட்டமிட்டு இருக்கின்றோம். சமூகவலைதளத்தில் பரவிய ஆடியோ சித்தரிக்கப்பட்டதாக இருக்கலாம்." என்று அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்த வீடியோ பார்ப்பவர்கள் லிஸ்ட்டில் இளைஞர்கள், வயதானவர்கள், அரசியல்வாதிகள் என்று மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். 

எல்லாருக்கும் நல்லா கேட்டுகோங்க..18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள் குறித்த வீடியோக்களை பார்ப்பவர்களை தான் காவல்துறையினர் விசாரிக்க திட்டமிட்டு இருக்கின்றனர். வீண் வதந்திகளை கிளப்பிக்கொண்டு இருக்காதீங்கபா.! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

porn videos arrest full details


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->