இதமான படகுப் பயணம் செல்ல.. மனதை மயக்கும் பூலாம்பட்டி.!
poolampatti
பூலாம்பட்டி, சேலத்தில் இருந்து 48கி.மீ தொலைவிலும், எடப்பாடியில் இருந்து 11கி.மீ தொலைவிலும், மேட்டூரில் இருந்து 18கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
மேட்டூர் அணைக்கு தம்பி என்று சொல்லும் அளவிற்கு பரந்து கிடக்கிறது பூலாம்பட்டி. இது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதி.

காவிரி, தனது பயணத்தில் மேட்டூரில் இளைபாறிவிட்டு, அடுத்த 15-வது கிலோமீட்டரில் பயணத்தின் நடுவே டீ குடிக்க நிற்பது போல் நின்று செல்லும் இடம்தான் பூலாம்பட்டி.
நெருஞ்சிப்பேட்டை இடையே காவிரி ஆறு ஓடுகிறது. மின்சாரம் எடுக்க தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், ஆற்றின் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது.

பூலாம்பட்டி இரண்டு கிலோமீட்டர் அகலத்திற்கு பரந்து விரிந்து, கடல்போல் காட்சியளிக்கும்.
காவிரியின் கரையில் அமைந்திருப்பதால் இந்த கிராமம் பெரிதும் விவசாயத்தையே நம்பியுள்ளது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் போன்ற நன்செய் பயிர்கள் அதிகம் விளைகின்றன. பூலாம்பட்டி அருகில் உள்ள தடுப்பணை மூலம் ஆற்றில் விவசாயத்திற்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது.
ஆண்டு முழுவதும் தண்ணீர்...
உற்சாக குளியல்...
இதமான படகுப் பயணம்...

சுவையான மீன் வறுவல்...
பாலமலையின் குளிர் காற்று...
பசுமையாக உள்ள விவசாய நிலங்கள்...
பல திரைப்படங்களுக்கு பிரபலமான படப்பிடிப்பு தளம்...
ஸ்ரீ கைலாசநாதர் கோவில்...
1000 ஆண்டு பழமையான பாலமலை சித்தேஸ்வரன் ஆலயம்...