பொன்னமராவதி கலவரத்திற்கு காரணமானவர்கள் கைது!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்!! - Seithipunal
Seithipunal



புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வாட்ஸ் அப்பில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மீதும், அவர்களின் வாகனம் மீதும், தனியார் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அப்பகுதியையே வன்முறை களமாக்கினார்.

இதனையடுத்து தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் இழிவாக பேசிய வர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்குநடந்த சம்பவத்தை அடுத்து, பொன்னமராவதியை சுற்றியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் செல்வராஜையும், அவர் சார்ந்துள்ள சமூகத்தையும், பெண்களையும்  2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் உள்ள 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 18ம் தேதி இரவு செல்வராஜின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்தநிலையில் பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட விவகாரத்தில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மஞ்சவயல் கரிசல்காடு பகுதியை சேர்ந்த  34 வயது நிரம்பிய செல்வக்குமார் என்பவரை சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வந்தபோது நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது செல்வக்குமார் போலீசாரிடம் கூறுகையில், நான் கடந்த சில ஆண்டுகளாக சிங்கப்பூரில் தங்கி வேலை செய்து வருகிறேன். சிங்கப்பூரில் வேலை செய்யும் தனது சமுதாயத்தை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவர்களுடைய ஆலோசனையின்பேரில் கடந்த 14ம் தேதி மாலை சிங்கப்பூர் வெஸ்ட் லைட் பகுதியில் சர்ச்சைக்குரிய அவதூறு ஆடியோவை பதிவு செய்தேன். 

பின்னர் அந்த ஆடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பினேன். அந்த ஆடியோ பதிவு கடந்த 17ம் தேதி காலை முதல் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஒரு நபர் மூலம் வைரலாக பபரவியது. இத்தகைய ஆடியோ தனது சமுதாயத்தில் ஒரு பற்று உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரித்து வெளியிட்டதாக அவர் கூறினார். இதனையடுத்து செல்வக்குமார் என்பவரையும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த வசந்த்என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாதி பற்றிற்காக சொந்த சமூகத்தையே இழிவு படுத்தி பேசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponnamaravthi issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->