பொன்னமராவதியில் மீண்டும் சர்ச்சை!! பாதுகாப்பு பணியில் இருந்த பெண்காவலர் செய்த காரியத்தால் பரபரப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வாட்ஸ் அப்பில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

போலீசார் மீதும், அவர்களின் வாகனம் மீதும், தனியார் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி அப்பகுதியையே வன்முறை களமாக்கினார். உள்ளூர் காவல் நிலையம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் கூடினர்.

மேலும் கடை வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்களில் சிலர் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்ட போலீசார் தடியடி நடத்தி பொதுமக்களை அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து  இழிவாக பேசியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மீண்டும் பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து அங்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவ்வாறு பாதுகாப்பு பணியில் இருந்தவர் தான் பெண் காவலர் நந்தினி என்பவர். 

இந்நிலையில், அவர் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணத்திற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார் என சக காவலர்கள் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ponnamaravathi police suicide attempt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->