மண்பானையில் பொங்கள் வைப்பதற்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா..?! இது தெரியாம போச்சே..! - Seithipunal
Seithipunal


பொங்கல் மண்பானையில்  வைப்பதே மகிமை. 

பொங்கல் நமது பாரம்பரியமிக்க மரபு பண்டிகை. வீட்டு முற்றத்தில் மண்ணால் செய்யப்பட்ட அடுப்புக்கட்டியில், புது மண் பானையில் புத்தரிசியிட்டு பனையோலைக் கொண்டு பொங்குவதே அதன் சிறப்பு.இதனால் தான் அதற்கு பொங்கல் என்ற பெயரே வந்தது. ஆனால் கால மாற்றத்தில் இந்த நடைமுறைகள் மெல்ல மெல்ல மாறத் தொடங்கின. முற்றத்தில் வைக்கப்பட்ட பொங்கல் நகரங்களில் வீட்டுக்குள் இடம் பெயர்ந்தது. மண்பானை... பித்தளை, சில்வர் என்றாகி இப்போது குக்கராக மாறி விட்டது. இவற்றில் மண் பானையை ஒரங் கட்டியதுதான் நாம் செய்த மிகப்பெரிய வர லாற்றுப்பிழை. பாரம்பரியம் மிக்க மண் பானையில் பொங்கலிடுவது தற் போது நகரங்களில் முற்றிலும் அழிந்து விட்டது.

 கிராமங்களிலும் இதன் பயன்பாடு குறைந்து வருவது வேதனைக் குரியது.

 “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப வீடு களில் உள்ள பழைய மண்பாண்டங்களை பொங்கலுக்கு முன் தினமான போகியன்று போட்டுடைத்து விட்டு, தைத்திங்கள் முதல் நாளில் இருந்து புதிய பானைகளில் சமைக்கும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தது. ஆனால் இன்று நம்மிடையே அப்பழக்கம் இல்லாமல் போய் விட்டது.

இது போன்றநிலை பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்டபோது மக்கள் பொங்கியெழுந்து போராட்டம் நடத்தியதால் ஜல்லிக்கட்டு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இதையடுத்து பலரும் நம் நாட்டு மாடுகளை வளர்த்து அது சார்ந்து விழுப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.

நமது பாரம்பரிய உடையான வேட்டிக் கட்டும் பழக்கம் நம்மவர்களிடையே குறைந்ததையடுத்து அதனை மேம் படவைக்க வேட்டி தினத்தை ஏற்படுத்தி னார்கள். இதனால் இன்று இளைஞர்களும் வேட்டி அணிய ஆரம்பித்துள்ளார்கள். அதுபோல் மக்கள் மறந்து விட்ட மண்பாண்டங்களை மீட்டெடுக்க ஒரு புரட்சி ஏற்பட்டால்தான் அத்தொழிலை காப்பாற்ற முடியும்.

நம் மரபு வாழ்வில் முக்கிய பங்கு வகித்த மண்பாண்டம் இன்று காட்சிப் பொருளாக மாறிவருகிறது.பொங்கல் பண்டிகைக்கு கூட பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறோம். மண்பானையை மறந்து ஆரோக்கியம் இழந்து பாரம்பரியத்தை சிதைத்து வெறுமனே சம்பிரதாயமாக தான் இன்றைய பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஒரு பண்டிகை கொண்டாட்டம் என்றால் அதில் அனைவரின் உழைப்பும் பங்களிப்பும் இருக்கும். அப்படி தான் பஞ்ச பூதங்கள் அடங்கிய இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதம் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகையில் மண்பாண்டங்கள், மண்ணடுப்புகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் குயவர்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது. ஆனால் இன்று அவற்றை மக்கள் பயன்படுத்த தவறியதால் அவர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து விட்டது. பலர் தங்கள் குலதொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர். இருப்பினும் சிலர் இன்னும் இத்தொழிலை உயிர்ப்புடன் செய்துவருகின்றனர். அவர்களை போற்றும் விதமாகமும் நமது பண்பாட்டை பறைசாற்றும் விதமாகவும் நாம் பொங்கல் அன்றாவது மண்பானையில் பொங்கலிட்டு மரபை காக்க வேண்டும்.

நவீனம் என்ற பெயரில் நாம் இன்று அனைத்தையும் இழந்து புவியையும் சிதைத்துவிட்டோம். நம் மரபில் பயன் படுத்திய அனைத்தும் இயற்கையை பாதிக்காத தேங்கும் குப்பைகளாக இல்லாமல் எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத ஒன்றாகவும், அதன் வாயிலாக சூழலுக்கும் எந்த உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லாததாகவும் இருந்தது.

இன்றைக்கு காலமாற்றத்தினாலும், சொகுசாக வாழ பழகிவிட்டதாலும், பழமையை மறந்து குக்கர் பொங்கலுக்கு மாறிவிட்டோம். ஆனால், மண்பானையில்தான் பொங்கல் வைக்கவேண்டும். அதுக்கு காரணமிருக்கு. நாம் வாழும் உலகம் ஆகாயம், காற்று, நெருப்பு,நீர், நிலம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனது. நமது உடலும் பஞ்சபூதங்களால் ஆன சேர்க்கையே. நாம் உண்ணும் உணவும் பஞ்சபூதங்களால் ஆனதே.இவை மட்டுமல்ல, நாம் உபயோகப்படுத் தும் அனைத்து பொருட்களுமே பஞ்சபூதங்களின் சேர்க்கையே!

இந்த வாழ்வியல் தத்துவத்தை நமக்கு உணர்த்தவே, நிலத்தில் இருக்கும் மண்ணை கொண்டு, நீர் சேர்த்து, பக்குவமாய் பானை செய்து வெட்டவெளியில் காயவைத்து நெருப்பின் உதவியோடு சுட்டெடுத்தால் அழகிய பானையாக உருவெடுக்கும்.

பஞ்சபூதங்கள் சரிவிகிதத்தில் ஒன்று சேர்ந்தால் அழகிய, அனைவருக்கும் உதவக்கூடிய, ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்காத பொருளாய் மாறும்.

இதுபோல மனிதனும் தனது ஐம்புலன்களை சரிவிகிதமாய் நல்ல விதத்தில் பயன் படுத்தினால் வாழ்க்கை அழகானதாகவும்,

அர்த்த முள்ளதாகவும் மாறும் என்பதை உணர்த்தவே மண்பானையில் பொங்கல் இடுவது வழக்கம்.

எனவே இந்த பொங்கல் முதல் அனைவரும் மண்பானையில் பொங்கலிடுவோம் என்று சபதம் ஏற்போம். அதன் மூலம் நமது பாரம்பரியம், ஆரோக்கி யம் காக்கப்படுவதுடன் குயவர்களின் வாழ்வாதாரமும் பேணப்படும்.அது மட்டுமல்ல அத்தொழிலும் மறைந்துவிடாமல் இருக்கும்.

ஏனென்றால் பரம்பரை பரம்பரையாக இந்த தொழில் செய்பவர்களால்தான் மண்பாண்டங்கள் தயாரிக்க முடியும். இந்த கணினி காலத்தில் இதுபோன்ற தொழில்களில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த நிலை நீடித்தால் பிற்காலத்தில் மண்பாண்டகள் செய்ய ஆள் இல்லாத அவல நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு. பொங்கலிட மட்டுமல்லாமல் நம் வீடுகளில் சோறு சமைக்கவும் குழம்பு கூட்டு வைக்கவும் தண்ணீர் பிடித்து வைக்கவும் மண்பாண்டங்களை பயன் படுத்த தொடங்கவேண்டும்.

மண் பானையில் சமைக்கும் சோறும் மண் பானையில் ஊற்றி வைக்கும் தண்ணீரும் தனிச் சுவையுடன் இருக்கும். இன்று நகரங்களில்கூட குடிதண்ணீர் மண் பானைகளில் ஊற்றிவைத்துக் குடிப்பது விரும்பப்படுகிறது. சாதாரண தண்ணீரில் இருக்கும் தாது சத்துக்கள் மினரல் வாட்டரில் கிடையாது. மினரல், வெந்நீரில் இவையனைத்தும் இறந்து போகின்றன்.

மண் பானை மிகச்சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த நீர் சுத்திகரிக்கும் கருவி மண் பானை ஆகும். இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட மண்பாண்டங்களை புறந்தள்ளுவது நமது வாழ்க்கையையே தொலைப்பதற்கு சமம்.

எதிர்வரும் காலங்களில் சமையல் செய்வதற்கு மண் பாண்ட பொருட்களின் பயன்பாட்டை அதிகபடுத்தி வாழ்வை ஆரோக்கியமாகவும் மகிழ்வாகவும் மாற்ற முனைவோம். மண்பானை இல்லாமல் வைக்கும் பொங்கல் முழுமையில்லாத பொங்கலே. பொங்கலை மண்பானையில் வைத்து இந்த தை பொங்கலை அனைவருக்கும் இன்பம் பயக்கும் தொடக்கமாக தொடங்கலாம். தமிழர் வாழ்வியல் மட்டுமே ஒரு முற்று பெற்ற வாழ்வியல். இதில் அனைத்திற்குமான தீர்வு உண்டு. இதனை உணர்ந்து நம் பாரம்பரியத்தை மீட்டெடுத்தால் எல்லார் வாழ்விலும் வசந்தம் வீசும்.

இயற்கை வாழ்வியலுக்கு திரும்புவதற்கான பாதையின் தொடக்கமாக இந்த தை அமையட்டும். 

மன மகிழ்ச்சி, முக மலர்ச்சி, முழு நிறைவான செல்வம், சுகமான உடல் நலம், எந்நாழும் நிறைவாக உங்கள் வாழ்வில் பொங்கிட   தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pongal celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->