நடுரோட்டில் அரைகுறை ஆடை..! ஹோட்டலில் நிர்வாண நடனம்.! மினி கோவாவாக பாண்டிச்சேரி?..!! கொதித்தெழும் எம்.எல்.ஏ..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி சட்டப்பேரவையில் பூஜ்ய நேரத்தில், அன்பழகன் எம்எல்ஏ திடீரென கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், "தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் புதுச்சேரி மாநிலத்தில் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. கஞ்சா உள்ளிட்ட பழக்கத்திற்கு ஆளாகும்,  இளைஞர்கள் பணத்திற்காக கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. இதனை விற்பவர்கள் யார் என்பது காவல் துறையினருக்கு நன்றாக தெரியும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க, என்ன சட்டம் அரசிடம் இருக்கின்றது?. கோவா போன்ற பல நகரங்களில் குறிப்பிட்ட பகுதியில் பெண்களும், ஆண்களும் அரைகுறை ஆடையுடன் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் அந்த நிலை, புதுச்சேரியில் இல்லை. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பிரதான சாலைகளிலும், இவர்கள் அரைகுறை கால்சட்டையை போட்டு சுற்றி திரிகின்றனர். 

admk anbalagan, அதிமுக அன்பழகன்,

சுற்றுலாவிற்கு வரும் பயணிகள் பல்வேறு விதமான தவறுகளை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை மகிழ்விக்க ஹோட்டலில் அரைகுறை நிர்வாண நடனம் நடக்கின்றது.ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் புதுவை மாநிலம் செக்ஸ் சுற்றுலா தளமாக மாறி வருகின்றது. கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. இது வரும் தலைமுறை இளைஞர்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனை அரசு தடுக்க வேண்டாமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்வர் நாராயணசாமி, "ஆன்லைன் லாட்டரி மற்றும் கஞ்சா ஆகியவற்றை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. முதல் கட்டமாக கஞ்சா கட்டுக்குள் வந்துவிட்டது. ரயில் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக விழுப்புரம் பகுதியில் இருந்துதான் கஞ்சா வருகின்றது. பல இடங்களில் கஞ்சா பிடிபட்டுள்ளது.

கஞ்சா, ganja, kanjaa,

இதனை விற்க சிறுவர்களை பயன்படுத்தப்படுகின்றனர். கஞ்சா விற்பவர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் விழுப்புரத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் ஈடுபடுவதாக தெரிகிறது. சமீபத்தில் திருபுவனை பகுதியிலும் கஞ்சா பிடிபட்டு இருக்கின்றது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. என அவர் பதிலளித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pondichery get changes to goa admk mla speech in pondichery assembly


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->