அதை நீங்கள் தான் கேட்டு சொல்ல வேண்டும்.. எனக்கு என்ன தெரியும்?..! பொன்.இராதாகிருஷ்ணன் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது காலியாக இருக்கும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைதேர்தலானது வரும் மாதத்தின் 21 ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்கவுள்ள அதிமுக கட்சியானது தனது கட்சியின் சார்பில் போட்டியாளர்களை அறிவித்த நிலையில்., இந்த போட்டியாளர்கள் அறிவிப்புக்கு கூட்டணி கட்சிகள் ஒப்புதல் வழங்கியதாகவும் தெரிவித்தது. 

அதிமுகவின் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆதரவும் கிடைத்துவிட்டதாகவும்., பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்கவில்லை என்றும் தகவல் வெளியானது. இதனால் அதிமுக - பாரதிய ஜனதா கட்சியை இந்த தேர்தலில் தள்ளிவைக்க போவதாகவும் தகவல்கள் கசிந்தது. 

dmdk with pmk, dmdk pmk,

இதுமட்டுமல்லாது கடந்த வேலூர் பாராளுமன்ற இடைத்தேர்தலில் பாஜக - அதிமுக ஒத்துழைப்பு சரியில்லை என்றும் பேசப்பட்டு வந்த நிலையில்., சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் இது குறித்து பேசினார். இது குறித்து முதல்வர் தெரிவித்தாவது., பாஜக - அதிமுக கூட்டணியானது எந்த விதமான பிரச்சனையும் இன்றி தொடர்ந்து வருகிறது. இதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் எங்களுக்குள் இல்லை. 

தற்போது பாரதிய ஜனதா கட்சிக்கான தமிழக தலைவர் இல்லாததன் காரணமாக., அதிமுக நிர்வாகிகள் அவர்களை சந்தித்து பேச வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். இந்த விஷயம் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான பொன்.இராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விக்கு பொன்.இராதாகிருஷ்ணன் தெரிவித்த பதிலாவது., 

edapadi palanisamy, எடப்பாடி பழனிசாமி,

அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பாராளுமன்ற தேர்தலின் போது உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியானது தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த கூட்டணியில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. தற்போது நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் போட்டியில் பங்கேற்கும் அதிமுக வேட்பாளரை ஆதரிக்க கூறி., அதிமுக தற்போது வரை ஏதும் கேட்கவில்லை. 

இது குறித்து நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளாத நிலையில்., எங்களது கட்சியின் சார்பில் காஷ்மீர் 370 சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது குறித்து மக்களுக்கு விளக்கம் அளித்து கூட்டங்களை நடத்தி வருகிறோம். இதனைப்போன்று 150 ஆவது காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். அவர்கள் எங்களிடம் ஆதரவு கேட்டாலும்., கேட்காவிட்டாலும் பணிகள் செய்வது குறித்து நாங்கள் ஆலோசித்து செயல்படுவோம். 

pon radhakrishnan, பொன் ராதாகிருஷ்ணன்.

அதிமுகவை பொறுத்த வரையில் பல யோசனைகள் இருக்கலாம். அவர்கள் எங்களது கட்சியின் தேசிய தலைவர்களிடம் இது குறித்து பேசியுள்ளனரா? என்பது எனக்கு தெரியாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பாமக மற்றும் தேமுதிக தலைவர்களை சந்தித்ததில் எந்த விதமான தவறும் இல்லை. அவர்களும் எங்களுடன் கூட்டணியில் தான் உள்ளார்கள். நாங்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் இருக்கிறோம். அதிமுகவையும் - தமிழக அரசியும் தொடர்ந்து நாங்கள் ஆதரித்து வருவோம் என்று தெரிவித்தார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon radhakrishnan speech about by election alliance problem


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->