பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில்., கராரில் சிபிஐ.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு., மணிவண்ணன்., சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. மேலும்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பல சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த வழக்குதொடர்பான விசாரணையானது தற்போது சி.பி.ஐ காவல் துறையினர் விசாரணையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில்., பல திடுக்கிடும் தகவல்கள் மற்றும் பல உண்மைகள் வெளிவந்தன. இந்த பாலியல் குற்றச்சாட்டில் பாதிக்கப்பட்ட பெண்களை இரகசியமாக விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர்., இதற்கான குற்றப்பத்திரிகையை தயாரித்துள்ளனர். 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியான நிலையில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜனின் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு இருந்த நிலையில்., தற்போது குண்டர் சட்டமானது மீண்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில்., கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் பெண் வழக்கறிஞர்கள் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஓய்வு பெற்ற நீதிபதி குழுவை அமைத்து., உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும்., இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில்., இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் "இரகசிய விசாரணை நடைபெற்று வருவதால்., இதற்கான குற்றப்பத்திரிகையை வெளிப்படையாக தெரிவிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது".

இந்த விசாரணை குறித்த அறிக்கைகள் அனைத்தும் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து., இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் தயாராகியுள்ள அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும்., இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று தள்ளி வைத்தும் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pollachi Sexual harassment issue CBI investigation court order


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->