பொள்ளாச்சி பார் நாகராஜ் மீண்டும் அதிரடி கைது.! காவல் துறையினர் அதிரடி.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சியில் பணிக்கு மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் சுமார் 200 க்கும் மேற்பட்ட பெண்களை காதல் வலையில் விழ வைத்து., ஆபாச படமெடுத்து மிரட்டி நகை மற்றும் பணங்கள் பறித்தும்., பலாத்காரம் செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக முதலில் சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் என்பவர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இவர்களில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு., மணிவண்ணன்., சபரிராஜா., சதீஸ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது. மேலும்., இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் பல சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில்., இந்த வழக்குதொடர்பான விசாரணையானது தற்போது சி.பி.சி.ஐ.டி காவல் துறையினர் வசத்தில் இருந்து சி.பி.ஐ காவல் துறையினர் விசாரணையின் கீழ் மாற்றம் செய்யப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக வெளியான ஆடியோ குறித்த விசாரணையை எஸ்.பி.கலைமணி மேற்கொண்டு வருகிறார். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்., திருநாவுக்கரசு வட்டிக்கு பணம் வழங்கி வந்த நிலையில்., இவன் பணம் வழங்கி வந்த குடும்பத்தார் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளார்களா? என்ற விசாரணையிலும்., பாதிக்கப்பட்ட பெண்கள் யாரேனும் தற்கொலை செய்து வழக்குகள் திசை மாற்றப்பட்டதா? என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில்., இவர்களின் மீதான குற்றப்பத்திரிக்கையையே சி.பி.ஐ தாக்கல் செய்துள்ளது. இதன் மூலமாக முக்கிய குற்றவாளிகளான திருநாவுக்கரசு., சபரிராஜன்., வசந்தகுமார்., சதீஷ் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் மீது தகுந்த சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த நிலையில்., பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்சனையில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் கைதான பார் நாகராஜ் தற்போது ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில்., அங்குள்ள ஜோதி நகர் பகுதியில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில்., தகராறில் ஈடுபட்டதாக கல்லூரி மாணவர்கள் 14 நபர்கள் உட்பட பார் நகராஜையும் கைது செய்துள்ளனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pollachi issue bar nagaraj arrested by police


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->