50 ஆயிரம் லஞ்சத்திற்கு ஆசைப்பட்ட இன்ஸ்பெக்டர் - கடைசியில் ஏக காலத்திற்க்கும் அனுபவிக்கவிருக்கும் நரக வேதனை..? - Seithipunal
Seithipunal


 50 ஆயிரம் ரூபாய் இலஞ்சத்திற்கு ஆசைப்பட்ட காவல் ஆய்வாளருக்கு சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஈத்தாமொழியை சேர்ந்தவர் முருகேசன். இவர், கடந்த 2006 ஆம் ஆண்டு மாவட்டக் குற்றப்பிரிவில் அளித்த புகார் மனு மீது மேல் நடவடிக்கை எடுப்பதற்கு, அப்போது ஆய்வாளராக இருந்த பெரியண்ணன், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறிய முருகேசன், லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தார்.லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அறிவுரையின்பேரில், 5 ஆயிரம் ரூபாயைப் பெரியண்ணனிடம் முருகேசன் வழங்கும் போது, அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த வழக்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், ஊழல் தடுப்பு சட்டத்தின் இரு பிரிவுகளில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என, தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

POLICED JAILED FOR ASKING BRIBERY FROM PEOPLES


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->