நள்ளிரவில் நடுரோட்டில் அலறிய பெண்ணால் பரபரப்பு.! பெண் காவலர் உதவியுடன் சாலையில் பிறந்த குழந்தை.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் நடுரோட்டில் அலறிய கர்ப்பிணிப் பெண்ணிற்கு, பெண் காவலர் உதவியால் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு 2.30 மணியளவில் வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே, சாலையோரத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் மிகுந்த சத்தத்துடன் அலறியுள்ளார்.

அப்பொழுது அவ்வழியாகச் சென்ற பெண் தலைமை காவலர் இளவரசி மற்றும் சக காவலர்கள் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவியுள்ளனர். இதையடுத்து சாலையிலேயே அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தேவையான உதவிகளை செய்துள்ளனர்.

நள்ளிரவில் பெண் காவலர் செய்த இந்த மனிதாபிமான செயல் மக்களிடையே மிகுந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குழந்தை பெற்ற அந்தப் பெண் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த ஹபானா என்பதும், அவருடைய கணவர் பிரிந்து சென்றதால் சாலையோரத்தில் வசித்து வந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police woman helped pregnant women child birth in road


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->