ஊரடங்கு உத்தரவு: புதுமணத்தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த போலிசார்.! கோவையில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கோவையில் மாலையும் கழுத்துமாக காரின் பின்சீட்டில் புதுமண தம்பதி உட்கார்ந்திருந்தனர்,அந்த காரை நிறுத்தி "எங்கே மாஸ்க்?" என்று போலீசார் கேட்கவும் அந்த ஜோடி திருதிருவென விழித்தது.

தற்போது நாடு முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் போலீசாரும் பொதுமக்கள் வெளிநடமாட்டம் இருந்தால் அவர்களை எச்சரித்து வருகின்றனர். எந்நேரமும் விழிப்புணர்வுடன், தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது.

சூலூரில் சில மணி நேரத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதியினர் அந்த காரில் இருந்தனர், இவர்கள் அவிநாசி நோக்கி கருமத்தம்பட்டி வழியாக சென்று கொண்டிருந்தனர்.

இந்த காரினை போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளே பார்த்தனர், அப்போது காரின் பின்சீட்டில் அந்த தம்பதிகள் உட்கார்ந்திருந்தனர். பட்டுப்புடவை, பட்டுவேட்டியில் கழுத்தில் மாலையுடன் அந்த ஜோடி இருந்தது.

ஆனால் 2 பேருமே மாஸ்க் போடவில்லை, இதனால் போலீசார் ஏன் மாஸ்க் போடலை என்று அவர்களிடம் கேள்வி எழுப்பினர். இப்படி காரை நிறுத்தி கேட்பார்கள் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து, கொரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் ஆபத்து எப்படி இருக்கும், எப்படி அந்த வைரஸ் பரவுகிறது என்று அந்த மணமக்களுக்கு போலீசார் எடுத்து கூறினர். மேலும் 2 பேருக்கும் மாஸ்க் எடுத்து தந்து அணிய சொல்லி, அதன்பிறகே அவர்களை வழியனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police warning to newly married couples


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->