வீடியோ பகிர்வதை உடனடியாக நிறுத்துங்கள்.. பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..? திணறும் பேஸ்புக் வலைதளம்..! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி விவகார வீடியோவை முகநூலில் பகிர்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மேற்கு மண்டல காவல்துறை அறிவித்துள்ளது.

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் சமூகவலைத்தளங்கள் மூலம்  200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த காமக்கொடூர மிருக கும்பலிடம் இளம்பெண் ஒருவர் சிக்கி தவித்து துடிதுடித்து கதறும் வீடியோ ஒன்று  சமீபத்தில் வெளியானது. மேலும் அதனை  காண்போர் அனைவரின் உள்ளத்தையும் பதைபதைக்கும் வகையில் அதில் வரும் காட்சிகள் இருந்துள்ளது. தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் விஷயமாக பொள்ளாச்சி கொடூர சம்பவம் இருந்துவருகிறது.

பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன், பொய்யான தகவல்களை பரப்பி எங்கள் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஒருசிலர் தவறான தகவல்களைப் பரப்புவதால் எங்களுடைய குடும்பத்துக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.

அரசியல் ஆதாயத்திற்காக தவறான தகவல் பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீதும், வழக்கை திசை திருப்ப முயற்சி செய்பவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் நாங்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் இருக்கிறோம் என புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த செயல் பாதிக்கப்பட்ட பெண்களை மீண்டும் மீண்டும் சிதைப்பதற்கு சமமாகும்.

இதனை கருத்தில் கொண்டு வீடியோ பகிரப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மீறி பகிர்வோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

English Summary

police request to peoples


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal