காவல் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை.. கோவை அருகே நிகழ்ந்த சோகம்....! - Seithipunal
Seithipunal


ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயம்புத்தூர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் அணியில் ஆய்வாளராக பணிபுரிபவர் செல்வராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி மகன்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில், புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை வளாகத்தில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் அறைக்கு வந்த சக காவலர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்

உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து, அவரின் உடலை பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police man committed suicide due family Issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->