பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.. மனித உரிமை ஆணையர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற காவல்துறையினர்..! - Seithipunal
Seithipunal


மனித உரிமை ஆணையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், வடூர் காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அவர் முருகானந்தம். இவர் 2015-ம் ஆண்டு பெருகவழந்தான் போலீஸ் நிலையத்தில் சிறப்பு தனிப்படையில் இடம் பெற்றிருந்த போது மணிகண்டன் என்ற விசாரணை கைதி உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர், ஆனால், இந்த வழக்கில் தனக்கு சம்மந்தம் இல்லை என தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று அவர் மனித உரிமை ஆணையத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது திடீரென மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சியடியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை மீட்டனர். அவரிடம் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், குற்றவாளியாக மானம் இழந்து உயிர் வாழ்வதைவிட என் உயிரை மாய்த்துக்கொள்கிறேன். தவறான குற்றப்பத்திரிகையால் என் வாழ்விழந்து உயிர்நீக்கிறேன்' இது தனது அஞ்சலி என எழுதியிருந்தார். மேலும், தனது இறப்பிற்கு காரணம்சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் ரஹமத்நிஷா எனவும் பழிவாங்குவதற்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக எழுதியுள்ளார். அவருடைய மனுவை மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police man attempt suicide Front of Human Rights Commission office


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->