#கடலூர் || எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து... மர்ம நபர்களுக்கு வலை வீச்சு..! - Seithipunal
Seithipunal


எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தீவைத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், பெரியகுப்பம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட தானே புயலின் காரணமாக ஆலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதனால், 75 சதவீத பணிகள்முடிந்த நிலையில் ஆலை அமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது.

ஆனாலும், அந்த ஆலையினுள் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு, தாமிரம் உள்ளிட்ட பல்வேறு தளவாட பொருட்கள் வைக்கப்படுள்ளதால் அவற்றை காவலாளிகள் மூலம் பாதுகாத்து வந்தனர். கடந்த சில மாதங்களாக அந்த தடவாள பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20ம் தேதி கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள் குடோனுக்கு தீவைத்துவிட்டு தப்பியோடினர்.தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்புதுறையினர் தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், இன்று அங்கு வந்த மர்ம நபர்கள் மேலும், ஒரு குடோனுக்கு தீவைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தீயை  அணைக்கு பணியில் ஈடுப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police investigation about Fire accident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->