தலைதெறிக்க ஓடிய போலீஸ் இன்ஸ்பெக்டர் - ஈரோட்டில் மக்கள் கண் முன்னரே நிகழ்ந்த பரபரப்பு சம்பவம் : பீதியில் உறைந்த காவலர்கள்..! - Seithipunal
Seithipunal


லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களிடம் சிக்கிய போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளர்.

ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளராக இருப்பவர் பதி. இவர் வாகன சோதனை என்ற பெயரில் சத்தியமங்கலம் மைசூர் சாலையில் லாரிகளை மடக்கி சோதனை நடத்தி வந்தார்.

அப்போது அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகளின் எண்களை வைத்து அந்த லாரிகளின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் லஞ்சம் கேட்டு வந்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில், சத்தியமங்கலம் பகுதி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து லஞ்சம் வாங்கும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு காவலர்கள் திட்டமிட்டனர்.

இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம் பெட்ரோல் பங்க் அருகே போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, ஒரு மணல் லாரியில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் வேடத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வந்துள்ளனர்.

அந்த லாரியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் பதி மடக்கி சோதனை நடத்தி லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவலர்கள் வேடத்தை கலைந்து நாங்கள் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் என்று கூறி அவரை கையும், களவு மாக பிடித்தனர்.

பின்னர் விசாரணைக்கு அழைத்தபோது, ஆய்வாளர் பதி, “நீங்கள் முன்னால் செல்லுங்கள், நான் பின்னால் வருகிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் வாகனத்தின்பின்னால் காவல்துறை வாகனத்தில் வந்துகொண்டுடிறத்த காவல் ஆய்வாளர் பதிகாவல்துறை வாகனத்துடன் தலைமறைவாகினர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர்ஆய்வாளர் பதியை தேடி வருகின்றனர்.

English Summary

police inspector run away from arrest


கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
கருத்துக் கணிப்பு

புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யா கருத்து?
Seithipunal