முதலீட்டாளர்களிடம் பல கோடி மோசடி: 'தேவநாதன் யாதவிடம் பாதி வில்லங்க சொத்துக்கள்': நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்..!
Police inform court that half of Devanathan Yadav assets are embezzled assets
தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி மூன்றாவது முறையாக மனு அளித்தனர்.
இந்நிலையில், தேவநாதன் யாதவ் இயக்குனராக ‘தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் இருந்த போது முதலீடு செய்து பாதிக்கப்பட்ட அனைவரின் நலனும் பாதுகாக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உறுதி அளித்துள்ளது.

இந்த மோசடி வழக்கில் தேவநாதன் யாதவுக்கு சொந்தமான 2,000 கிலோ தங்கத்தை வைத்தே தங்களுக்கு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க முடியும் என்று பாதிக்கபட்டவர்கள் தரப்பு வாதம் செய்தனர். அதனை தொடர்ந்து தேவநாதன் யாதவின் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, தேவநாதன் யாதவ் தாக்கல் செய்த ரூ.300 கோடிக்கான சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அதில் பாதிக்கும் அதிகமான சொத்துகள் வில்லங்கமான சொத்துகள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Police inform court that half of Devanathan Yadav assets are embezzled assets