திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்.. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அருந்ததியர் இளைஞர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, தலித் விடுதலை கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அம்பேத்கர் முழு உருவ சிலை நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று ஈரோடு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர், அருந்ததியர் இளைஞர் பேரவையின் தலைவர், தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர்  உட்பட 18 அமைப்புகளை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இதில், ஒரு வாரம் பொறுத்துக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு அரசிடம் பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒப்புக் கொள்ளாத மற்ற அமைப்பினர், திட்டமிட்டபடி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கர் சிலை நிறுவப்படும் என அறிவித்து சென்றனர்.

மேலும், இரவில் மீண்டும் நிர்வாகிகள் ஆலோசித்து, ஒரு வாரத்துக்கு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். இருந்தபோதிலும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் தலைமையில் 40 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு நீடித்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police in erode collector office


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->