மது அருந்திவிட்டு மூதாட்டியை இடித்து தள்ளிய காவலர்.! வழக்கு பதியாத காவல்துறை.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிய காவலர் ஒருவர் மூதாட்டியை மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார், பின் வேகத்தடையில் தடுக்கி விழுந்து அந்த காவலர் பொதுமக்களிடம் சிக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

மயில்சாமி என்ற அந்த காவலர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். திங்கட்கிழமை மாலை  மயில்சாமி மது அருந்திவிட்டு முழு போதையில் இருசக்கர வாகனத்தை தாறுமாறாக ஓட்டி வந்ததுள்ளார்.

அப்போது சூளை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்க்காக காத்திருந்த  மூதாட்டி மீது மோதிவிட்டு காவலர் மயிசாமி நிற்காமல் சென்றுள்ளார். இதையடுத்து அவரை பின் தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்கள் துரத்திக்கொண்டு வர, சிறிது தூரம் சென்ற மயிலசாமி  சாலையில் இருந்த வேகத்தடையில் தடுக்கி கீழே விழுந்தார். 

அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பொது மக்கள் அவரை வசைபாடினர். இதையடுத்து, காவலர் மயில்சாமியை பெருமாநல்லூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று ஒப்படைத்த பொது மக்கள், அவர் மீது புகார் கொடுக்க வில்லை என்பதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என  பெருமாநல்லூர் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police drink and drive


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->