தவறான புரிதலால் தந்தையை கொன்ற மகன்..!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்...!! - Seithipunal
Seithipunal


தனது நண்பர்கள் உதவியுடன் தந்தையை கொன்ற மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், வெள்ளோடு கோம்பை பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு தங்கராஜ் (47).  இவருக்கு திருமணமாகி ரீட்டா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், காந்திகிராமம் ரயில்வே கேட் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில் அது ஜெரால்டின் உடல் என கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜெரால்டின் மகன் கிஷோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, எனது தந்தைக்கு குடிபழக்கம் உள்ளதால் அவர் ரயிலில் அடிபட்டு இருக்கலாம், இல்லை யாரிடமாவது போதையில் சண்டையிட்டு அவர்கள் இவரை கொலை செய்திருக்கலாம் என்று அலட்சியமாக மகன் கிஷோர் பதில் அளித்துள்ளார். 

இதற்கிடையே, ஜெரால்டின் செல்போனை போலீசார் சோதனை செய்ததில், மகன் கிஷோரின் அழைப்பு தான் கடைசியாக வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், கிஷோரிடம் கிடுக்குப்புடி விசாரணையை மேற்கொண்டனர். இந்த முறை நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்தது.

போலீசாரின் விசாரணையின்படி, "ஜெரால்டு ரீட்டா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால், ரீட்டாவின் வீட்டார் இவர்களின் காதலை ஏற்றுகொள்ளாமால், ரீட்டாவுக்கு வேறொருவருடன் திருமணம் செய்து வைத்தனர். 

அவர்களுக்கு ஒரு பிறந்த மகன் தன இந்த கிஷோர். இதற்கிடையே ரீட்டாவை மறக்க முடியாத ஜெரால்டு அவரை கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் ரீட்டாவின் மகனை சொந்த மகன் போல ஜெரால்டு வளர்த்துள்ளார். மேலும், ஜெரால்டு- ரீட்டா தம்பதிக்கு ஒரு மகள் பிறந்துள்ளார். 

இந்த நிலையில், ஜெரால்டு குடிபழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். மேலும், மகன் கிஷோரின் சம்பளபணத்தையும் வாங்கி செலவழித்துள்ளார். இதனால், தந்தை மகன் இருவருக்கும் இடையே மோதல் உண்டாக்கியது. 

மேலும், தனது தாயை கடத்தி வந்து திருமணம் செய்ததும் கிஷோருக்கு பிடிக்கவில்லை. இதனால் தந்தையை கொலை செய்ய கிஷோர் முடிவு செய்து உள்ளான். சம்பவம் நடந்த அன்று கிஷோர் தனது நண்பர்கள் உதவியுடன் தனது தந்தையை கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் உடலை போட்டு விட்டு சென்றுள்ளான்.

இதனையடுத்து போலீசார் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். தந்தை மகனுக்குள் ஏற்பட்ட தவறான புரிதலால் ஒரு கொலை நடந்துள்ள சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த கொலைக்கு மது பழக்கமும் ஒரு முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest a young man due to killing his father


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->