மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்.. மருத்துவரை தேடி வரும் காவல்துறை...! - Seithipunal
Seithipunal


மருத்துவமனையில்  17 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் எலும்பு முறிவு மருத்துவமனை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.  இவர் மருத்துவமனையில் பெண் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு போனஸ் தராததால் அவர் வேலையை விட்டு விலகினார்.

இந்நிலையில், அவரின்  மகளை அழைத்த  மருத்துவமனை நிர்வாகம் அவரது தாய்க்கு போனஸ் போட்டுள்ளதாகவும் அதனை பெற்று கொள்ளவருமாறும் கூறியுள்ளனர்.  இதனால் அந்த சிறுமி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அப்போது, அந்த சிறுமியை ரஜினிகாந்த் பாலியல் துன்புறுத்தியுள்ளார். இதனால், பயந்து போன அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனை அடுத்து அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ரஜினிகாந்த் மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police are searching for the doctor who sexually harassed the girl at the hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->