பாமக தலைவர் ஜி.கே. மணி தொடர் முன்னிலை..! பாமக முன்னிலையில் உள்ள தொகுதிகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான இன்று 75 வாக்கு மையங்கள் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, 8.30 மணிக்கு மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்பட்டது.

இந்த தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்படி, தி.மு.க. - பா.ம.க. - 18 இடங்களிலும், காங். - பா.ம.க. 3 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - வி.சி.க - 1 இடங்களில் நேரடியாகவும், பா.ம.க. - மார்க்சிஸ்ட் கம்யூ. - 1 இடங்களில் நேரடியாகவும் மோதுகிறது.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் 20349 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், திருப்பத்தூர் தொகுதியில் ராஜா 13834 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், தர்மபுரி தொகுதியில் வெங்கடேஸ்வரன் 14068 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், சேலம் தொகுதியில் அருள் 23598    வாக்குகள் பெற்று முன்னிலையிலும், காஞ்சிபுரம் தொகுதியில் மகேஷ் குமார் 7968 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், மயிலம் தொகுதியில் சிவகுமார் 11321 வாக்குகள் பெற்று முன்னிலையிலும், நெய்வேலி தொகுதியில் ஜெகன் 21600 வாக்குகள் முன்னிலையிலும், பென்னாகரம் தொகுதியில் ஜி.கே மணி 18633 வாக்குகள் முன்னிலையிலும் இருக்கின்றனர்.  
 
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Pennagaram Candidate GK Mani Continuously forefront


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->