பாமக பிரமுகர் தாக்கப்பட்ட விவகாரம்.. காவல் உதவி ஆய்வாளர் பெண்ணாடத்திற்கு மாற்றம்... கொந்தளிக்கும் பாமக.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் தாலுகாவில் அமைந்துள்ள மூங்கில்பாடி கிராமத்தை சார்ந்தவர் பெரியசாமி. இவரது மகனின் பெயர் சக்திவேல். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு நேரத்தில் தனது இல்லத்தில் இருந்துள்ளார். இரவு சுமார் 11 மணியளவில் இந்த கிராமத்திற்கு வரும் மின்சாரத்தில் தடையை ஏற்படுத்திய காவல் துறை அதிகாரிகளான சின்னசேலம் காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் மூன்று காவல் துறையினர் மப்டி சீருடையில் சென்று சக்திவேலை வீட்டை விட்டு வெளியே அழைத்துவந்து அடித்து உதைத்துள்ளார். 

மேலும், மதுபோதையில் இருந்த காவல்துறை அதிகாரி சுதாகர், சக்திவேலை கொலை வெறியுடன் அடித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இருட்டில் சக்திவேலின் நண்பர்கள் செய்வதறியாது தங்களின் அலைபேசியில் விடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும், சக்திவேலை அடித்து காவல் துறை வாகனத்தில் ஏற்ற முயற்சிக்கையில், சக்திவேலின் தாய் மற்றும் தந்தை கண்ணீருடன் கெஞ்சியும், சக்திவேலின் தாயரை அடித்து தள்ளிவிட்டு காவல்துறை அதிகாரி அழைத்து சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் மக்கள் தெரிவித்த சமயத்தில், சக்திவேல் தனது முகநூலில் பதிவு செய்த விஷயம் தொடர்பாக எழுந்த பிரச்சனையில் காவல் துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. 

மேலும், அங்குள்ள உள்ளூர் இளைஞர்களை காவல் துறையினர் அனாவசியமாக ஒருதரப்பு கும்பலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பட்டு தாக்கி வருவதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர். காவல் துறையினர் சக்திவேலை அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே மின்சாரம் கிராமம் முழுவதும் விநியோகம் செய்யப்ட்டுள்ளதாகவும், மின்மாற்றிகளுக்கு அருகேயே காவல் துறையினர் இருந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். இரவு முழுவதும் சக்திவேலை காவல் துறையினர் அடித்து உதைத்து பின்னர் காலையில் அனுப்பி வைத்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். 

இளைஞர் தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் கண்டனத்தை பெற்று வந்தது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததை அடுத்து, காவல் அதிகாரி சுதாகரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது இவர் மீண்டும் பெண்ணாடம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசயத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk party member attacked by police transferred pennadam police station


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->