மகளிர் கல்லூரியில் பாமகவினர் செய்த புரட்சி!! பெருமிதத்தில் அன்புமணி கூறிய வார்த்தை.!! - Seithipunal
Seithipunal


 

பொதுவாகவே, பல பள்ளி, கல்லூரி சுவர்களில் தேவையற்ற சுவரொட்டிகள், விளம்பர நோட்டீசுகள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். இதனை மாடுகள் பிய்த்து தின்று, அங்கொன்றும், இங்கொன்றுமாக கிழிந்து தொங்கும். 

பள்ளிகளின் புறத்தோற்றம் இதனால், பாழடையும். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பள்ளிக்கூடங்களில் இத்தகைய அலங்கோலங்களை நாம் அனைவருமே கண்டிருப்போம். இதனை முறைப்படுத்தி சுற்று சூழலை காப்பது இளைஞர்களின் கடமையாகும். 

இந்த கடமையை பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் செய்துள்ளனர். உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு, கடலூர் நகரத்தில் உள்ள KNC மகளிர் கல்லூரியின் சுற்றுச்சுவரை முற்றிலுமாக சுத்தம் செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்  அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுடன் அவர்களின் பொன்மொழிகளை கடலூர் பாமக மாணவர் சங்கத்தை சேர்ந்தோர் செய்துள்ளனர். 

இதனை பாராட்டும் விதமாக பாமகவின் இளைஞரின் அணி தலைவர், அன்புமணி அவரது ட்வீட்டர் பக்கத்தில், "கடலூர் நகரத்தில் உள்ள KNC மகளிர் கல்லூரிச் சுற்றுச்சுவரை முற்றிலும் சுத்தம் செய்து டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர்  அப்துல் கலாம் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுடன் அவர்களின் பொன்மொழிகளை வரைந்த கடலூர் பாமக மாணவர் சங்க தம்பிகளுக்கு எனது வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார். 

 "

பாமகவினர் ஆண்டுதோறும் பாமகவின் மற்றொரு அமைப்பான பசுமை தாயகத்தின் மூலம் சுற்று சூழல் தினத்தை கொண்டாடும் வழக்கத்தை கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk members doing social activities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->