ராமாநாதபுரத்தில் களமிறங்கிய பாமக.! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதற்கு செயலாளர் ஹக்கீம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலை வகிக்க அமைப்பு செயலாளர் அம்ஜத்கான் வரவேற்பில் நிகழ்வு துவங்கியது. 

இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிவில் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டது. அதில், "உள்ளாட்சி தேர்தலுக்கு வேண்டிய ஆயத்த பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும். போன்றவை முக்கியமானதாகும். 

Image result for tasmac seithipunal

இதுகுறித்து பலமுறை நகராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இக்கட்சியை சேர்ந்த மாவட்ட மகளிர் மற்றும் இளம் பெண்கள் சங்கம் சார்பில் டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். 

இந்த கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் உட்பட பல்வேறு இளைஞர் சங்கம், மகளிர் சங்கம், மாவட்ட பொருளாளர் ஆயிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk meeting in ramnadu


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->