டாஸ்மாக் விவகாரத்தில், தமிழக அரசு மேல்முறையீடு.. அதிரடி நடவடிக்கை எடுத்த பாமக.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டு இருந்து மதுபான கடைகள், கட்டுப்பாடுகளின் அடிப்படையில் திறக்கப்பட்டது. இந்தியாவின் டெல்லி, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா அசாம் போன்ற மாநிலத்தில் அமோக மதுபான விற்பனையானது நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலாகவே மதுபிரியர்கள் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

சமூக இடைவெளியை கடைபிடிக்காது மதுபானத்தை வாங்கி சென்றனர். இந்த காரணத்தால் கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கும் அச்சம் அதிகரித்தது. மேலும், கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவை வீட்டிற்கு அழைத்து வரும் அறிய விஷயமாக மதுபானக்கடையில் கூட்டம் காணப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து மறுபரிசிலனை செய்ய உத்தரவிட்டது.

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி துவங்கிய மதுபான விற்பனை பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இன்றைய தினத்திலேயே பல்வேறு கொடூர கொலைகள் மற்றும் விபத்துகள் என்று தொடர் பிரச்சனை அரங்கேறியது. மதுபானத்தை மறந்த நபர்கள் கூட, கடைகளின் வாயிலில் காத்திருக்க துவங்கினர்.

மே 8 ஆம் தேதியான நேற்று சென்னை உச்சநீதிமன்றம் மதுபான கடைகளை மூடக்கூறி அனுமதி வழங்கவே, இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடையும் எதிர்த்து பாமக வழக்கறிஞர் பாலு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். இது குறித்து பாலு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர் பாலு தனது ட்விட்டர் பக்கத்தில், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை எதிர்த்து கேவியட் மனு இன்று தாக்கல் செய்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK lawyer K Balu appeal court about tasmac


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->