முன்னாள் மாவட்ட செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம் - பாமக தலைவர் ஜி.கே மணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட தர்மபுரி சத்தியமூர்த்தி என்பவர் பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், " தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த, தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் ஆ. சத்தியமூர்த்தி என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், 

நேற்று (25.09.2021) சனிக்கிழமை முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் நீக்கப்படுகிறார். 

அவருடன்  பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Head Office and President GK Mani MLA Announce Dharmapuri Sathyamoorthi Dismiss From Party


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->