போதை அரக்கனுக்கு எதிரான படத்தை படைத்தவருக்கு வாழ்த்துக்கள் - ருத்ர தாண்டவத்திற்கு டாக்டர் இராமதாஸ் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


ருத்ர தாண்டவம் திரைப்படத்திற்கு மருத்துவர் இராமதாஸ் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

வண்ணாரபேட்டை, திரௌபதி ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக இயக்குனர் மோகன் ஜி சத்ரியன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, இயக்குனர் மற்றும் நடிகர் கவுதம் வாசுதேவ் மேனன், தம்பி ராமையா, ராதாரவி, மாளவிகா அவினாஷ், மாரிமுத்து, ஒய் ஜீ மகேந்திரன், மனோபாலா, ராம்ஸ், ஜெயம் எஸ்.கே கோபி, தீபா, காக்கா முட்டை விக்னேஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் ட்ரைலர், பாடல்கள் அனைத்தும் வெளியாகி, அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று படம் திரைக்கு வந்தது. இந்த படம் சமூகத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தெளிவுபட பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் இளைஞர்கள் இன்றுள்ள சூழ்நிலைக்கு, அவர்களுக்கு நல்வழியை ஏற்படுத்திக்கொடுக்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள திரைப்படமே ருத்ர தாண்டவம். 

திரைப்படம் வெளியானதில் இருந்து பல்வேறு நபர்களும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், இயக்குனர் மோகன் ஜிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

அவரது ட்விட்டர் பதிவில், " தமிழ்நாட்டு இளைஞர்களை போதைப்பொருள் எவ்வளவு மோசமாக சீரழிக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ருத்ரதாண்டவம் திரைப்படத்தை இயக்குனர் மோகன் உருவாகியிருப்பதாக அறிந்தேன். இன்றைய நிலையில் இது சமுதாயத்திற்கு தேவையான கருத்து! இதை வரவேற்போம்! 

தமிழகத்தில் இரு வாரங்களில் 1000 கிலோ கஞ்சா பிடிபட்டிருக்கிறது. பெரும்பான்மையான கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் போதை தலைவிரித்தாடுகிறது. எனக்கு வேண்டியவரின் மகனே இதனால் பாதிக்கப்பட்டான். அத்தகைய போதை அரக்கனுக்கு எதிரான படத்தை படைத்தவருக்கு வாழ்த்துகள்! " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Wish to Mohan G Kshatriyan about Rudra Thandavam Movie Against Drug Culture


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->