காடுவெட்டி ஜெ. குருவின் அமோக ஆதரவு ஏ.கோவிந்தசாமிக்கு உள்ளது - மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


மருத்துவர் இராமதாஸ், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காடுவெட்டி ஜெ. குரு, எனது தம்பிகள், தங்கைகள், பாட்டாளி சொந்தங்களின் ஆதரவு ஏ.கோவிந்தசாமிக்கு உள்ளது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி அவர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தர்மபுரிக்கு கொண்டு வரப்படும். ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கு 10 இலட்சம் பேரின் கையொப்பம் பெற்று, தமிழக முதல்வரிடம் அந்த கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதனை தமிழக முதல்வர் நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தின் வறட்சியை ஒழித்து, வளர்ச்சியை கொண்டு வருவோம். ஏ.கோவிந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றியடைய செய்ய வேண்டும். 

மருத்துவர் இராமதாஸ், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, காடுவெட்டி ஜெ. குரு, எனது தம்பிகள், தங்கைகள், பாட்டாளி சொந்தங்களின் ஆதரவு ஏ.கோவிந்தசாமிக்கு உள்ளது. அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெற செய்ய வேண்டும் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Told about Kaduvetti J Guru Supports Pappireddipatti Candidate TN Election 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->