#Breaking: வன்னியர் இட ஒதுக்கீடு அரசாணை.. முதல்வர், முன்னாள் முதல்வர், முன்னாள் அமைச்சருக்கு டாக்டர் இராமதாஸ் நன்றி..! - Seithipunal
Seithipunal


வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதற்கு, மருத்துவர் இராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. அரசுடன் நடத்த பேச்சுவார்த்தையின் முடிவில் வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

இந்த அரசாணைகள் அனைத்தும் சட்டவல்லுனர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து வழங்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் இதனை அமல்படுத்துவதில் சற்று கால தாமதம் ஏற்பட்டது. மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையும் தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இன்று காலை இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தார். 

Breaking: ஸ்தம்பித்துப்போன சென்னை மாநகரம்... எல்லையிலேயே தடுத்து  நிறுத்தம்.. காவல்துறை குவிப்பு...! - Seithipunal

இதனையடுத்து, தற்போது, தமிழக அரசு அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக நன்றி தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், வன்னியர்கள் இட ஒதுக்கீடு கிடைக்க உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.  

மருத்துவர் இராமதாஸின் ட்விட்டர் பதிவில், " தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.50% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று ஆணையிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சருக்கு உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு! அறிவிப்பு வருமா? வராதா? எகிறும்  எதிர்பார்ப்பு! 3 மணிக்கு கூடும் சட்டசபை! - Seithipunal

தொழிற்கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டாலும், அதிலும் 10.50% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மனநிறைவளிக்கிறது. பணி நியமனங்களிலும் இந்த ஒதுக்கீடு நடைமுறையாகி விட்டது!

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.50% நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதால் மிக மிக பின் தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும். வன்னியர்களின் கல்வி - வேலைவாய்ப்புகள் மேம்பட வழிவகுக்கும் இந்த சட்டத்தை இயற்றிக் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருக்கும் நன்றிகள் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Thanks to Vanniyar Reservation Victory Govt Order Issued


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->