மக்களின் அறியாமையால் இந்தியாவுக்கு டாட்டா காட்டி செல்லும் கொரோனா - டாக்டர் இராமதாஸ் கலாய்.! - Seithipunal
Seithipunal


அறியாமையால் வாடும் மக்களை விட்டு கொரோனா டாட்டா காட்டி செல்வதாக மருத்துவர் இராமதாஸ் ட்விட் பதிவு செய்து கலாய்த்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் முதலில் தென்பட்டு, தற்போது வீரியமெடுத்து தனது அலைபரவலை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய கட்டத்தில் நாம் 2 ஆவது கொரோனா தொற்று அலையில் இருக்கிறோம். 3 ஆவது அலை இந்தியாவில் எப்போது வேண்டும் என்றாலும் ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம், தனிமனித இடைவெளி மற்றும் சானிடைசர் உபயோகம் செய்தல் போன்றவற்றை இன்று வரை கடைபிடித்து வருகிறோம். இன்னும் சில வருடங்கள் இது நடைமுறையில் இருக்கலாம் என்றும் மருத்துவ மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவை பொறுத்த வரையில் பல இடங்களில் மக்களை கண்காணிக்க அரசால் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டாலும், பல காரணத்திற்காக அவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தவிர்த்து அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவர் இராமதாஸ் ட்விட் பதிவு செய்து கொரோனவை கலாய்ப்பது போல மக்களின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி, வழிகாட்டு நெறிமுறையை கடைபிடிக்க அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான ட்விட்டர் பதிவில், ‘‘ இந்திய மக்கள் வறுமையிலும், அறியாமையிலும் வாடுகின்றனர். என்னிடமிருந்து தப்பிக்க வழிகளை கூறினாலும் செய்ய மறுக்கிறார்கள். இந்தியர்கள் மீது பரிதாபப்பட்டு ஈரேழு உலகத்தில் பூலோகத்தை தவிர்த்து பிற 13 உலகங்களுக்கு நான் செல்கிறேன். குட் பை இந்தியா’’- இப்படிக்கு கொரோனா " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Stands about Corona Peoples Knowledge


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->