அரசுத்துறை தொடக்க நிலை பணியாளர் நியமனத் தடையை நீக்குக - டாக்டர் இராமதாஸ் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


அரசுத்துறைகளில் தொடக்க நிலை பணியாளர் நியமனத் தடையை நீக்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தமிழ்நாடு அரசுத் துறைகளில் தொடக்கநிலை பணியாளர்களை நியமிக்க முடியவில்லை. புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதும் தான் இதற்குக் காரணம் ஆகும்!

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக 20.05.2020-இல் பிறப்பிக்கப்பட்டு, 24.10.2020-இல்  திருத்தம் செய்யப்பட்ட நிதித்துறை அரசாணை எண் 382- இல் தான் இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை இன்றைய சூழலுக்கு பொருந்தாதவை!

கொரோனா நிலைமை சீரடைந்து பொருளாதாரம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.  புதிய பணியிடங்களை உருவாக்கி, படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகளை வழங்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Request to TN Govt about Govt Employees Issue 18 Sep 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->