சுக்கா... மிளகா... சமூக நீதி? புத்தகம் வெளியீடு.. ஜி.கே மணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், " சமூகநீதி குறித்த வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும்  பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட 30 அமைப்புகளின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எழுதிய  ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ என்ற தலைப்பிலான சமூகநீதி வரலாற்று நூல் பாட்டாளிகளின் சமூக நீதி நாளான நாளை செப்டம்பர் 17&ஆம் தேதின் இணையவழியில் வெளியிடப்படுகிறது.

கடலூர் உள்ள சுபா கிராண்ட் விடுதி ஓஷன் அரங்கத்தில் நாளை காலை 11.00 மணிக்கு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நூலை பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவரும், இட ஒதுக்கீட்டுப் போராட்ட முன்னோடியுமான பேராசிரியர் தீரன் அவர்கள் வெளியிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்தில்  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மார்பில் பாய்ந்த குண்டுகளைத் தாங்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் தியாகி தட்டானோடை செல்வராஜ் அவர்கள் பெற்றுக்கொள்வார். வன்னியர் சங்கத் தலைவர் பு.தா அருள்மொழி முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ச. சிவப்பிரகாசம் வரவேற்புரை நிகழ்த்துவார்.

இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா உள்ளிட்ட தலைவர்கள் இணையவழியில் கலந்து கொள்வார்கள்.  பா.ம.க தலைவர் ஜி.கே.மணி நிகழ்ச்சிக்கு தலைமையேற்பார். பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பிப்பார். நிறைவாக நூலாசிரியர் மருத்துவர் அய்யா அவர்கள் ஏற்புரை நிகழ்த்துவார். வெளியீட்டாளரும், செய்திப்புனல் பதிப்பக உரிமையாளருமான ர.சுரேஷ்பாபு நன்றியுரையாற்றுவார். www.pmkofficial.com/SJW2020Live என்ற இணைப்பில் இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண முடியும்  என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Release Book Sukka Milaga Smooganeedhi 17 Sep 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->