எல்லையில் உயிரிழந்த இராணுவ வீரர் கருப்பசாமிக்கு, பா.ம.க சார்பில் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


காஷ்மீரின் இந்திய எல்லை பகுதியான லடாக் பகுதியில், நடந்த விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் நேற்று உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகா நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரின் மகன் கருப்பசாமி (வயது 34). இவர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்தார். 

இந்திய இராணுவத்தில் 'நாயக்' பதவி வகித்து வந்த கருப்பசாமி, காஷ்மீரின் லடாக் பகுதியில் பணியில் இருந்த போது நடந்த விபத்தில் மரணமடைந்துள்ளார். நாட்டுக்காக உயிரிழந்த கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், கன்யா (வயது 7), வைஷ்ணவி (வயது 5) ஆகிய மகள்களும், பிரதீப்ராஜ் (வயது 1) என்ற மகனும் உள்ளனர். இவரது மறைவுக்கு பல தரப்பினரும் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " லடாக் பகுதியில் நடைபெற்ற விபத்தில் கோவில்பட்டியைச் சேர்ந்த இராணுவவீரர் கருப்பசாமி வீரமரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  தேசத்தை பாதுகாக்கும் பணியில்  இன்னுயிரை ஈந்த  வீரருக்கு பா.ம.க. சார்பில் வீர வணக்கம். அவரது குடும்பத்திற்கு இரங்கலும், அனுதாபமும் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Regret to Kovilpatti Army Officer Karuppasamy Passed Away


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->