கந்துவட்டி தொல்லையால் விழுப்புரத்தில் குடும்பத்தோடு தற்கொலை - மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் புதூர் பகுதியை சார்ந்தவர் மோகன் தச்சு தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி யமுனேஸ்வரி. இவர்கள் இருவருக்கும் நித்ய ஸ்ரீ, ராஜ ஸ்ரீ, சிவபாலன் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக தச்சு தொழிலாளியாக பணியாற்றி வந்த மோகன், குடும்ப செலவுகளுக்கு பணம் இல்லாமல் அவதியுற்றுள்ளார்.

இதனையடுத்து கந்துவட்டி வாங்கி குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடனை அடைக்க இயலாமல் தவித்துள்ளார். தொடர்ந்து கந்துவட்டி கடன் தொல்லை கழுத்தை நெறிக்க, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிய மோகன், நேற்று இரவின் போது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இது குறித்து இரங்கல் தெரிவித்து ட்விட் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " விழுப்புரம் மாவட்டம் புதுப்பாளையத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளை கொன்று விட்டு, தாயும், தந்தையும் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், அவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Regret about Viluppuram Usury Interest Loan Family Suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->