பாலுவை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு டெபாசிட் கிடைக்க கூடாது - மருத்துவர் இராமதாஸ் சூளுரை.! - Seithipunal
Seithipunal


கே.பாலுவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் வாங்க கூடாது என மருத்துவர் இராமதாஸ் சூளுரைத்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஜெயங்கொண்டம் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு அவர்களை ஆதரித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசுகையில், " காங்கிரஸ் ஆட்சி முடிந்து திமுக ஆட்சி வந்ததற்கு விஷக்கிருமி பரவிவிட்டது என்று கடந்த காலத்திலேயே கூறிவிட்டார்கள். அந்த நிலை மீண்டும் வரக்கூடாது. திமுக ஆட்சிக்காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அராஜகம், அட்டூழியம், கட்டப்பஞ்சாயத்து இருந்தது. அந்நிலை மீண்டும் வேண்டாம். காவேரி டெல்டா பாதுகாப்பு வேளாண் மண்டல அறிவிப்பு கோரிக்கையை தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டு அறிவித்தார். 

கொரோனா வைரஸால் நீங்களும் - நானும் ஒரு வருடமாக பிரிந்திருந்தோம். ஒரு வருடத்திற்கு பின்னர் தற்போது 3 ஆவது நாளாக இன்று வந்துள்ளேன். தோட்டத்தில் பாட்டாளி சொந்தங்கள் தினமும் 100 பேர் இருப்பார்கள். அவர்களிடம் தினமும் பேசி மகிழ்ந்தேன். கொரோனாவால் அது முடியவில்லை. எனது மன வேதனையை உங்களிடம் முகநூல் மற்றும் அறிக்கை வாயிலாக தெரிவித்தேன். நீங்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். பாதுகாப்பாக இருங்கள். 

தமிழ் மக்களும், பாட்டாளி சொந்தங்களும் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் உயிர் மிகவும் முக்கியம். வழக்கறிஞர் கே.பாலுவின் முகத்தில் வெற்றிக்கனி தெரிகிறது. அந்த வெற்றிக்கனியை நீங்கள் தர வேண்டும். கே.பாலுவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர், டெபாசிட் வாங்க கூடாது. ஆண்டிமடம் பகுதியின் வளர்ச்சிக்கு கே.பாலு, அன்புமணி இராமதாஸ், நான் திட்டம் தீட்டியுள்ளோம். இங்குள்ள குறைகள் களையப்படும். களப்பணியில் கே.பாலு தொகுதியின் வளர்ச்சிக்காக சிறந்து விளங்குவர் " என்று பேசினார். 

Tamil online news Today News in Tamil

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Order PMK Supporters Make Mass Victory for K Balu Jayankondam Constituency TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->