டாக்டர் இராமதாசுக்கு எடப்பாடி பழனிச்சாமி, தமிழிசை சவுந்தர்ராஜன், அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு ஆளுனர் தமிழிசை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய செய்திக்குறிப்பில், " பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 83- ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று அவரை மாண்புமிகு தெலுங்கானா மாநில ஆளுனர் (புதுவை துணை நிலை ஆளுனர் கூடுதல் பொறுப்பு)  தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மருத்துவர் அய்யா அவர்கள் எல்லா நலமும்,வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குறிப்பிட்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘’காட்சிக்கு எளியவர் - மனத்தால் எளியோரின் மருத்துவர் கடிகாரம் - அதற்கு நேரம் சொல்லும் நியமம் கொண்டவர் இளைஞருக்கு வழிகாட்டும் பண்பாளர் பாமக நிறுவனர் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்தவர் நம் மருத்துவர் அய்யாவை அவர் பிறந்த நாளில் வணங்குகிறேன்” என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss Birthday wish Edappadi Palanisamy Tamilisai Soundarrajan Annamalai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->