#Breaking: மருத்துவர் இராமதாஸிடம் முக்கிய வேண்டுகோள் வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்...!! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களிடம் முதல்வர் மு.க ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து பெற்றார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதற்காக வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற விரும்பியதாகவும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தொலைபேசியில் பேசுவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள். தமிழக முதலமைச்சரான தமக்கு ஆலோசனைகளை வழங்கும்படியும் மருத்துவர் அய்யா அவர்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் அவர்களுக்கு தமது உளமார்ந்த வாழ்த்துகளை மருத்துவர் அய்யா அவர்கள் தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சரிடம் நலம் விசாரித்த மருத்துவர் அய்யா அவர்கள், தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss and TN CM MK Stalin Phone Conversation 8 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->