டாக்டர் இராமதாஸ் பிறந்தநாள்.. பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தொலைபேசியில் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 83-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். 

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலைய செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள தகவலில், " பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் சமூகநீதிக் காவலர் மருத்துவர் இராமதாஸ் அவர்களின் 83 ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று காலை அவரை மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். மருத்துவர் அய்யா அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், தில்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களும் இன்று காலை மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மருத்துவர் அய்யா அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் அய்யா அவர்கள்,‘‘ உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். 

மருத்துவர் அய்யாவை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின்  நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்’’ என்று வாழ்த்தினார். அதற்காக மருத்துவர் அய்யா அவர்களுக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மருத்துவர் அய்யா அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Ramadoss 82 Birthday Wish from PM Home Minister of India and Chief Minister of Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->