காவலர்களுக்காக பாமக வைத்த கோரிக்கை நிறைவேற்றம்.. மற்றொன்றை நிறைவேற்ற அன்புமணி வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


காவல்துறையினருக்கு வார விடுப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும், காவலர்களுக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல வருடமாக அரசுக்கும், காவல்துறை இயக்குனருக்கும் தொடர் கோரிக்கையை வைத்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வரை அது நிறைவேற்றப்படவில்லை. 

இந்நிலையில், தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு காவல் அதிகாரிகளுக்கு கட்டாய வார விடுமுறை, பிறந்தநாள் வாழ்த்து கூறுதல் ஆகியவற்றை உத்தரவிட்டார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இதனை உறுதி செய்தற். இந்த அறிவிப்பு காவல் துறை அதிகாரிகளிடையே மட்டுமல்லாது, சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. 

ஒரு நாள், ஒரு மணிநேரமாவது குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்துவிடமாட்டோமா? என்று ஏங்கிய பல காவல் அதிகாரிகளும் இதனால் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர். இந்நிலையில், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ், காவல் அதிகாரிகளின் பணி நேரம் 8 மணிநேரமாக மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தமிழக காவல்துறைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காவலர்களுக்கு வார விடுமுறை என்பது பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையாகும்!

காவலர்களுக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதையும் நிறைவேற்றி காவலர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சரும், காவல்துறை தலைமை இயக்குனரும் முன்வர வேண்டும் " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Tweet about TN Police Weekly Once Leave 1 July 2021 Wish


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->