#Breaking: மாநில அரசு மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தினாலும் சமூக அநீதி தான் - மரு. அன்புமணி.!! - Seithipunal
Seithipunal


மாநில அரசே மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்தினாலும் சமூக அநீதி தான் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " மருத்துவப் படிப்பில் மத்திய அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் நடத்தலாம். மாநில அரசு இடங்களுக்கு நீட் கூடாது... அதற்கு மாநில அரசே நுழைவுத் தேர்வு நடத்திக் கொள்ளும் என்று உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.  இது என்ன இரண்டும் கெட்டான் நிலைப்பாடு?

நுழைவுத்தேர்வு என்பது ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கக்கூடியது. அந்தத் தேர்வை மத்திய அரசு நடத்தினாலும், மாநில அரசு நடத்தினாலும் அது மாணவர்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதி தான். அதை தமிழக அரசு செய்யக் கூடாது!

எந்தப் படிப்புக்கும், எந்த வடிவிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. திமுகவின் நிலைப்பாடு என்ன? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும். ஆட்சியில் இல்லாத போது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தால் ஒரு நிலைப்பாடு கூடாது!

நீட் தேர்விலிருந்து ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள் தமிழகத்திற்கு விலக்கு பெறப்படும் என்று முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். அதற்காக சட்ட, அரசியல் நடவடிக்கைகள் அடங்கிய செயல்திட்டத்தை கால அட்டவணையுடன் உடனடியாக வெளியிட வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Warning about NEET Exam State Undertaken 23 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->