வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் மு.க ஸ்டாலின் - மருத்துவர் இராமதாஸ் குற்றசாட்டு...! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மு.க ஸ்டாலின் உட்பட திமுக கட்சியினர் அழிக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சூளுரைத்துள்ளார்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி அவர்களை ஆதரித்து, பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி கடத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இதன்போது, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " இந்த தேர்தல் நமக்கு மிக மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் விவசாயி எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும். 

எதிரணியில் உள்ள அரசியல் வியாபாரி மு.க ஸ்டாலின் தோல்வியை தழுவ வேண்டும். நம்முடன் பயணம் செய்பவர்கள் அனைவருமே விவசாய பெருமக்கள். கோவிந்தசாமிக்கு அமோக வெற்றி கிடைக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிடுகையில், தமிழகத்திலேயே அதிகளவு வாக்குகள் பெற்றே தொகுதி இதுவே. நாம் அனைவரும் தற்போது ஒன்று சேர்ந்து நமது கூட்டணியை அமோக வெற்றியடைய செய்ய வேண்டும். 

ஏ.கோவிந்தசாமியின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதிமுக கூட்டணியில் நாம் இணைத்து சமூக நீதி அடிப்படையிலானது. மருத்துவர் இராமதாஸ் தலையில் பல போராட்டம் நடத்தப்பட்டு, பலர் கைதாகி சிறைக்கு சென்று, பல உயிரிழந்து இன்று 10.5 விழுக்காடு முதற்கட்ட வெற்றியாக தனி இடஒதுக்கீடு கிடைத்துள்ளது. இது சமூக நீதி கூட்டணி. 

மு.க ஸ்டாலினிடம் சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, கணக்கு என்று எதனைக்கேட்டாலும், அவருக்கு என்னவென்றே அவருக்கு தெரியாது. மு.க ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக முடியாது. எனது தம்பிகள், தங்கைகள், அண்ணன்கள், தாய்மார்கள் மு.க ஸ்டாலினை வெற்றிபெற விடமாட்டார்கள். மு.க ஸ்டாலின் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் என்று துடித்துக்கொண்டு இருக்கிறார். இது ஒருபோதும் நடக்காது. பல தியாகங்களால் கிடைத்த வெற்றி இது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Told about DMK MK Stalin try to Close Vanniyar Reservation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->