திமுக கூட்டணியில் உள்ளவர்கள் பெண்களுக்கு பாதுகாப்பா? - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அனல்பறக்க பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


திமுகவும், திமுக கூட்டணி கட்சியினரும் பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சுட்டிக்காட்டினார்.

பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் எஸ்.பி வெங்கடேஸ்வரனை ஆதரித்து மாம்பழ சின்னத்தில் வாக்களிக்க கூறி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். 

இந்த பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " மு.க ஸ்டாலின் அரசியல் வியாபாரி. யார் வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நம்மில் ஒரு விவசாயி முதல்வராக வரவேண்டும். முதல்வராக விவசாயி எடப்பாடி பழனிச்சாமி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஏ.சி ரூமில் இருப்பவர்கள், சொகுசாக இருப்பவர்கள், முதலாளிகள் திமுக கூட்டணியில் உள்ளார்கள். நமது கூட்டணியில் வியர்வை சிந்தி உழைக்கும் வர்க்கம் இருக்கிறார்கள். திமுக மு.க ஸ்டாலின் தலைவராக உள்ள கட்சி அது கம்பெனி. திமுக என்றால் ஒருகுடும்பம். திமுக என்றால் கலைஞர் குடும்பம் அவ்வுளவே. 

மு.க ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?. மு.க ஸ்டாலினுக்கு கலைஞரின் மகன் என்ற தகுதியை தவிர வேறென்ன இருக்கிறது. மு.க ஸ்டாலினுக்கு ஆளுமை, சமூக நீதி, சமத்துவம் என்பது தெரியாது. ரூ.14 ஆயிரம் கோடியில் ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கி, மீதி ரூ.7 ஆயிரம் கோடி யார் கொடுப்பார்கள் என்று மு.க ஸ்டாலின் கேட்கிறார். சாதாரண ஒரு கணக்கு கூட தெரியவில்லை அவருக்கு. திமுக ஆட்சியில் பெண்கள் வீட்டினை விட்டு வெளியே வரமுடியாது. திமுக கூட்டணியில் உள்ளவர்களும், திமுகவினரும் அப்படிப்பட்டவர்கள். 

மு.க ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் ஆதரவளிக்கவில்லை. ஊடகம் இல்லையென்றால் திமுகவும், மு.க ஸ்டாலினும் இல்லை. திமுக நிர்வாகிகள் கூட ஸ்டாலினுக்கு ஆதரவு வழங்கவில்லை. ஸ்டாலின் திமுக கட்சிக்காரர்களை நம்பாமல், பீகாரை சார்ந்த ஹிந்தி பேசும் பிரசாந்த் கிஷோரை நம்புகிறார். அவருக்கு ரூ.700 கோடி கொடுத்து முதல்வர் ஆசையில் இருக்கிறார். பிரசாந்த் கிஷோர் தான் திமுக நிர்வாகிகளை தேர்வு செய்கிறார் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: இந்தியா உட்பட தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து இருப்பதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள். தனித்திருங்கள்.. விலகியிருங்கள்.. பாதுகாப்பாக இருங்கள்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Speech about Woman Safety Failure on DMK and Alliance Party


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->