விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் - அன்புமணி இராமதாஸ்.! - Seithipunal
Seithipunal


அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்கவேண்டும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தமிழ்நாட்டிலுள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 4084 கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் வேதனையளிக்கின்றன. இது தவறு!

கல்லூரிகள் திறக்கப்படாததை காரணம் காட்டி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கல்லூரிகள் திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைனில் கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்து பாடம் நடத்தி வரும் நிலையில் அதற்கான ஊதியத்தை மறுப்பது நியாயமல்ல!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய நிலுவையை உடனடியாக அரசு வழங்க வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Request to TN Govt about Lecturer Salary 4 August 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->