நடிப்பான், அழுவான் எதையும் நம்பிடாதீங்க.. பண்ரூட்டி தொகுதி மக்களுக்கு மரு. அன்புமணி உச்சகட்ட எச்சரிக்கை..! - Seithipunal
Seithipunal


பண்ரூட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் இரா.இராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பேசுகையில், " எதிரணியில் இருக்கும் வேட்பாளர் (திமுக சின்னத்தில் போட்டியிடும் த.வா.க வேல்முருகன்) குறித்து சொல்ல தேவையில்லை. அவன் ஒரு ரவுடி, பொறுக்கி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களை செய்கிறவன். அவரது பெயரை கூட எனக்கு சொல்ல பிடிக்கவில்லை. ரவுடி திமுக கூட்டணியில் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். 

உங்களிடம் வந்து நன்றாக நடிப்பான். தரையில் உருளுவான், அழுவான், மிரட்டுவான், என்னென்ன நாடகம் போடவேண்டுமோ அனைத்தும் போடுவான். எதிர்தரப்பு மீது 4 பக்க அளவிற்கு புகார்கள் உள்ளது. இவன் குண்டர் சட்டத்தில் ஜெயலில் இருக்க வேண்டியவன். மொத்தமாக அவனின் அவனின் மீது 13 காவல் நிலையத்தில் 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 3 கொலை முயற்சி. பண்ரூட்டி திமுக வேட்பாளரின் தகுதி இது. கடலூர் நகரம் மட்டுமல்லாது மாவட்டமே அழிந்துவிடும். அவனைப்பற்றி சின்ன வயதில் இருந்து எனக்கு தெரியும். 

ராஜராஜ சோழனின் வாரிசு போலவும், கடலூர் பகுதி ஜமீன்தார் போலவும் பேசுகிறான். மருத்துவர் இராமதாஸ், பாமக, இந்த சமூகம் இல்லையென்றால் அவன் இல்லை. இந்த சமூகம் கடவுளாக பார்க்கும் மருத்துவர் இராமதாசை பற்றி அவதூறாக பேசுகிறான். எங்கிருந்துடா நீ வந்த?. உன் இஷ்டத்துக்கு பேசுற.. மருத்துவர் இராமதாஸ் தான் அவனை வளர்த்துவிட்டார். இந்த சமூகம் அவனை வளர்த்துவிட்டது. இன்று அநீதி பக்கம் நின்று அட்டூழியம் செய்கிறான்.

வருமான வரியே 4 வருடமாக அவன் கட்டவில்லை. கேட்டால் வருமானம் இல்லையாம். எப்படி அது?. இவனது மிரட்டலால் 7 நிறுவனங்கள் கடலூரை விட்டு வெளியே சென்றுவிட்டது. திட்டமிட்டு கம்பெனியை விரட்டிவிட்டு இருக்கிறான். அன்று 2 ஏக்கர் வைத்திருந்தவன், இன்று தென்னத்தோப்பில் திரைப்பட ரவுடி போல இருக்கிறான். திமுக சார்பில் எதிரணியில் நிற்பவனை நீங்கள் தேர்ந்தெடுத்தால் உங்களின் சொத்துக்களை இழந்து தெருவிற்கு வந்துவிடுவார்கள்.

எதிர்க்கட்சி வேட்பாளரால் 500 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேசி பேசியே இளைஞர்களை அவன் வசம் வைத்துள்ளான். இளைஞர்களிடம் ஆசை காண்பித்து ஏமாற்றி, அவர்களை உபயோகம் செய்து நடுத்தெருவில் நிறுத்துகிறான். மாவீரன் படையும் எனது தம்பிகளே, அவர்கள் ஒருநாள் அனைத்தையும் புரிந்துகொள்வார்கள். அவர்கள் மனம்மாறி வந்தால், அன்போடு ஏற்றுக்கொள்வேன். 

எனது தம்பிகள் கட்சிப்பணி செய்தால், அவர்களின் இல்லத்திற்கு ஆட்களை அனுப்பி தம்பிகளின் பெற்றோரை மிரட்டுகிறான். மாவீரன் உயிருடன் இருந்த காலத்தில் மாவீரனை எதிர்த்து பேசினான். மாவீரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவன். இவன் சிறுபிள்ளைகள் மனதை மாற்றி விபரம் தெரியாத இளைஞர்களை பயன்படுத்திக்கொள்கிறான். உங்களின் வீடு, வீட்டு பெண்கள், எதிர்காலம் என அனைத்தையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

அவனிடம் உள்ள இளைஞர்களை கூட நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வாழ வேண்டும். அவனுடன் யாரும் சேராதீர்கள். அவன் ஒரு தீய சக்தி. அவன் கொடுக்கும் 500, 1000 த்திற்கு ஆசைப்பட்டால் உங்களின் வாழ்க்கையே நாசமாக போய்விடும். உங்களின் வீடு, வீட்டு பெண்கள், எதிர்காலம் என அனைத்தையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss gives Warning to Panruti Voters selection of MLA Candidate Culprit Velmurugan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->