பாட்டாளிகளே தயாராவீர்.. டாக்டர் இராமதாசுக்கு கொடுக்கும் அசல் பாராட்டு இதுதான்.. நிறைவேற்றுவோம் - அன்புமணி சூளுரை.!! - Seithipunal
Seithipunal


கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ள வன்னியர் சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடி வந்த பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம், தனது முதற்கட்ட வெற்றியாக வன்னியர்களுக்கு எம்.பி.சி பிரிவில் 10.5% இட ஒதுக்கீடை முதற்கட்ட வெற்றியாக அடைந்துள்ளது. இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்து, வன்னியர்களுக்காக கடந்த 42 வருடமாக போராடி வந்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசுக்கு நேற்று இணையவழியில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி பேசுகையில்., " தமிழகத்தின் தனிப்பெரும் சமுதாயமான வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு வன்னியர் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதனை பெற்றுக்கொடுத்த மருத்துவர் அய்யா, தலைவர் ஜி.கே மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா அருள்மொழி, பாமக, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்க நிர்வாகிகள், மருத்துவர் இராமதாஸ் தொடங்கிய பிற அமைப்புகளின் நிர்வாகிகள், பாட்டாளி மற்றும் வன்னிய சொந்தங்கள், வன்னியர்களுக்கு ஆதரவளித்த பிற சமுதாய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்நிகழ்வு மகிழ்ச்சியான நிகழ்வு.. அய்யாவுக்கு பாராட்டு விழா. நாம் அய்யாவை பாராட்ட வயது இல்லை. அவர் தான் நமக்கு ஆசி வழங்க வேண்டும். இந்த நிகழ்ச்சி மூலமாக அய்யா நம்மை ஆசிர்வதிப்பது போல நான் நினைக்கிறன். கொரோனா இல்லையென்றால் இன்று 25 இலட்சம் வன்னியர் சொந்தங்கள் தலைமையில் மகாபலிபுரத்தில் பாராட்டு விழா நடந்திருக்கும். கொரோனாவுக்கு பின்னர் அதுவும் நடக்கும். 

தமிழகத்தில் அய்யா என்ற ஒருவர் பிறக்கவிலை என்றால் எப்படி இருந்திருக்கும். தமிழகத்தில் எம்.பி.சி. என்ற பிரிவு இருந்திருக்காது, அருந்ததியர் மற்றும் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு இருந்திருக்காது, அகில இந்திய அளவில் ஓ.பி.சிக்கு இட ஒதுக்கீடு இருந்திருக்காது, மருத்துவ துறையில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு இருந்திருக்காது.. அய்யா என்ற ஒரு நபர் இல்லை என்றால் 108 அவசர ஊர்தி இந்தியாவுக்கு இருந்திருக்காது. கிராமப்புற சுகாதார திட்டம் வந்திருக்காது, போலியோ ஒழிந்திருக்காது, பொது இடங்களில் புகைபிடித்தல் தடை சட்டம், சேலம் இரயில்வே கோட்டம், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம், காவேரி வேளாண் மண்டலம் என எதுவும் வந்திருக்காது. அய்யா என்ற தனிநபரால் இவ்வுளவும் நடந்துள்ளது. பல விஷயங்களை இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். 

அப்படி அய்யாவால் வன்னியர்களுக்கு 10.5 % வந்துள்ளது. அய்யாவால் இதனை ஏற்க முடியவில்லை. 14 % விழுக்காடு வேண்டும் என உறுதியாக இருந்தார். பின்னர், நாங்கள் அய்யாவை அனைவரும் சமாதானம் செய்து அவரை ஏற்றுக்கொள்ள வைத்தோம். கடந்த 6 மாதம் நடந்த சம்பவங்களில் உங்களுக்கு சொல்ல முடியாத பல விஷயங்கள் நடந்துள்ளது. டிசம்பர் மாதம் முதல் இன்று வரை பல விஷயங்கள் நடந்தது. அய்யாவுக்கு கூட தெரியாமல் பல அரசியல் பிரச்சனைகள் நடந்து. முதற்கட்டமாக பல தடையை கடந்த வெற்றி கிடைத்துள்ளது.

சிலர் திடீரென சட்டம் கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார்கள். திடீரென சட்டம் கொண்டு வர முடியாது. சட்டமன்றத்தில் சட்டம் வர வேண்டும் என்றால் குறைந்தது 20 நாட்கள் ஆக வேண்டும். சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 20 நாட்கள் ஆகும். பல துறையை சார்ந்த அதிகாரிகள் கையெழுத்திட்டபின்னர் மசோதா வரும். இது ஒருநாளில், ஒரு மணிநேரத்தில் நடைபெறாது. பத்திரிகைகளில் தவறான விஷயங்கள் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் அது வழக்கு வாதமாகவும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

சட்டம் கடைசி நாளில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவு செய்துவிட்டார்கள். தேர்தல் தான் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. நான் சொல்வதெல்லாம் ஒன்றுதான். 10.5 % இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் தயவு செய்து இதனை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு, உங்களின் சமூகத்திற்கு வேண்டும் என்றால் மருத்துவர் அய்யாவிடம் கேளுங்கள். அவர் உங்களுக்கு வாங்கி கொடுப்பார். இதனை எதிர்ப்பதால் உங்களுக்கு ஓன்றும் கிடைக்காது. மருத்துவர் அய்யா ஏற்கனவே கூறிவிட்டார் அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடை வாங்குகொடுப்பேன் என்று. அதனை கட்டாயம் செய்வார். இதனை தயை கூர்ந்து எதிர்க்க வேண்டாம். 

இது ஜாதிக்கான, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என பார்க்க்க வேண்டாம். இது தமிழகத்தின் வளர்ச்சிக்கான பிரச்சனை. தமிழகத்தின் மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனை முன்னேற்ற மருத்துவர் இராமதாஸ் 42 வருடம் போராடி வெற்றி பெற்றுள்ளார். 21 உயிர்கள் ஒரே நாளில் போனது. செப்டம்பர் 17, 1987 ஆம் வருடம் ஒரே நாளில் 21 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் இனத்திற்கானக தியாகம் செய்தனர். வன்னியர்கள் போராட்டம் என இன்று வரை கணக்கில் எடுத்தால் 100 பேர் வரை இனத்திற்காக தங்களின் இன்னுயிரை இழந்துள்ளனர். இதனைப்போன்று பல தியாகம் செய்யப்பட்டுள்ளது. பலரும் சொல்கிறார்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னர் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டியது தானே என கேட்கிறார்கள். 

கடந்த 1980 வருடம் முதல் மருத்துவர் இராமதாஸ் ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என 40 வருடம் போராடினார். கலைஞரை நேரில் சந்தித்து, 40 ஜாதி சங்கங்களை தன்னுடன் நேரில் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. வன்னியர்களுக்கு மட்டும் தேவை என்றால் அய்யா ஏன் 40 ஜாதியை தன்னுடன் கலைஞரை பார்க்க அழைத்து செல்ல வேண்டும்?. அவர் ஒருவரே சென்று பேசியிருப்பார். அய்யா உறுதியானவர், பிடிவாதக்காரர். அவர் சொல்வதை செய்வார். அவரின் உறுதி மற்றும் பிடிவாதம் காரணமாக இன்று முதற்கட்ட வெற்றி கிடைத்துள்ளது. 

கடந்த 3 மாதங்கள் என்னென்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. அதனை வெளியே கூற முடியாது. அய்யாவின் உழைப்பு, அர்ப்பணிப்பு , உறுதி இந்த அளவுக்கு நம்மை கொண்டு வந்துள்ளது. வேறு யாரவது இருந்தால் மிஞ்சி போனால் 8 வருடம் போராடியிருப்பார்கள். அய்யா 40 வருடமாக போராடி வருகிறார். கடந்த 2 வருடமாக பல அழுத்தம் அரசுக்கு தொடர்ந்து கொடுத்து, இறுதியாக 6 அரவழிப்போராட்டம் நடைபெற்றது. இலட்சக்கணக்கான மனுக்கள் ஒவ்வொரு கட்டமாக வட்டாட்சியரிடம் இருந்து, முதல்வர் வரை கொடுக்கப்பட்டுள்ளது. 42 வருட தொடர் போராட்டம், இறுதி 2 வருடம், 6 கட்ட போராட்டம் நடைபெற்று 10.5 % வந்துள்ளது. பல தியாகங்கள், உழைப்புக்கு, வலிகளுக்கு பின்னர் அது கிடைத்துள்ளது. இது சமூக நீதி பிரச்சனை. 

இதனை சமூக நீதி கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். அந்த கண்ணோட்டத்தில் அதிமுக அரசு நிறைவேற்றியது. பொதுவாக அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திமுக எதிர்க்கும், அதனை நிறுத்தி வைக்கும். திமுக கொண்டு வந்த சட்டத்தை அதிமுக எதிர்க்கும், நிறுத்தி வைக்கும்.. ஆனால், வன்னியர் இட ஒதுக்கீடு பிரச்சனையில் அதிமுக - திமுக கட்சிகள் சமூக நீதி பிரச்சனையாக கருதியதால், அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திமுக நிறைவேற்றியது. அதனலாலேயே நான் பலமுறை கூறுகிறேன். இதனை சமூக நீதி பிரச்சனையாக பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன். இன்னும் பல வெற்றிகள் நாம் பார்ப்போம். அடுத்தபடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும். அது கிடைத்தால் அனைத்து சமூகத்திற்கும் இட பங்கீடு கிடைக்கும். 

42 வருடமாக நாங்கள் போராடி வருகிறோம், இன்று வரை ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை. 69 % இட ஒதுக்கீடு, அருந்ததியர், இஸ்லாமியர், கேரளாவில் ஈழவர், மத்திய அரசின் தற்போதையை EWS சட்டம் போன்றவை ஜாதி வரி கணக்கீடு நடத்தி கொடுக்கப்பட்டதா?. எந்த கமிஷனின் அடிப்படையில் அதனை கொடுத்தார்கள். ஏன் வன்னியர்களுக்கு மட்டும் ஜாதி வரி கணக்கெடுப்பு நடத்தி கொடுக்க வேண்டும் என்று அலட்சிய பேச்சு?. கேரளாவில் ஈழவர் சமூகத்தால் தொடர் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தின் வாயிலாக 14 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, இன்று ஈழவர் சமூகத்தினர் உலகம் முழுவதும் பல துறையில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். 

வன்னியர் சமூகத்தினர் இதனை உபயோகம் செய்து முன்னேற வேண்டும். சமூக முன்னேற்ற அணிக்கு இனி தான் பணி உள்ளது. ஓவ்வொரு மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தை தொடங்கி செயல்பட வேண்டும். நமக்கு கிடைத்த வாய்ப்பை நாம் எப்படி உபயோகம் செய்கிறோம் என்பதே வரும் காலத்தில் நாம் அளிக்கும் பதில் இருக்கும். நம்மை தவிர உள்ள 106 சமூகத்தில் ஒரு ஆல் கூட வழக்கு விசாரணைக்கு உள்ளாகவில்லை, ஒரு உயிரை இழக்கவில்லை. அவர்களையும் அய்யா அரவணைத்து செயல்பட்டார். அவர்கள் நம்மையே சோதித்தார்கள். இதனலாலேயே அய்யா எங்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடு என போராடினார். 

22 பேரில் இனி 12 அரசு அதிகாரிகள் வன்னியர்கள் வருவார்கள். ஒவ்வொரு பணியிலும் இது பொருந்தும். நாம் அனைவரும் செயலில் இறங்கி அதன் மூலமாக காண்பிக்க வேண்டும். இதனை ஏற்படுத்தி கொடுத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி. நாம் அய்யாவிற்கு செய்யும் நன்றிக்கடன் பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆட்சியை செய்ய வேண்டும். அதற்காக உறுதியாக உழைக்க வேண்டும். சட்டரீதியான வழக்குகளை பாமக பார்துக்கொள்ளும். இட ஒதுக்கீடு வரலாறை ஒவ்வொருவருக்கும் சொல்ல வேண்டும். மாவீரன் குரு இன்று நம்முடன் இல்லை. 

மாவீரன் அவர்கள் அய்யா சொன்ன செயலை, போராட்டங்களை செய்திருக்கிறார், இந்த இனத்திற்காக உழைத்திருக்கிறார். அய்யாவின் பேச்சை கேட்டு செயல்பட்டவர். அவர் இருந்திருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்திருப்பார். நமக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். கொரோனா இல்லையென்றால் தமிழகத்தின் வரலாற்றில் இல்லாத அளவு மாபெரும் நன்றி பாராட்டு விழாவாக நடத்தியிருப்போம். அய்யாவுக்கு நாம் நன்றியை செலுத்துவது பாமக ஆட்சியால் மட்டுமே முடியும். அதற்கு உறுதுணையாக உழைக்க வேண்டும். அய்யாவுடன் சேர்ந்து பல போராட்டம் நடத்த, சிறைக்கு சென்று, பல தியாகம் செய்த அனைவருக்கும் நன்றிகள். பாமகவுக்கு உறுதுணையாக இருந்த பிற சமூகம், பிற அமைப்புகள் அனைவருக்கும் நன்றிகள் " என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Full Speech of PMK Dr Ramadoss Appreciation Ceremony 31 July 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->