அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வாங்கி தரப்படும் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதி..! - Seithipunal
Seithipunal


வன்னியர் சமூகத்தை போல் அனைத்து சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு வாங்கி தரப்படும் என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உறுதியளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதன்போது அவர் பேசுகையில், " மருத்துவர் இராமதாஸ் 40 வருடமாக போராடி, 21 உயிர்களை கொடுத்து இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார். வன்னியர் சமூகத்தை போல் பல சமூகமும் பின்தங்கி உள்ளது. 

நம்மைப்போல பிற சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு போராடி வாங்கி தரப்படும். தமிழகத்தில் மிகப்பெரிய சமுதாயம் வன்னியர் சமூகம் பின்தங்கி இருக்கிறது. தற்போது கொடுக்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடும் அதிகரித்து கொடுக்கப்பட வேண்டும். பிற சமூகத்திற்கும் இட ஒதுக்கீடு பெற்றுத்தரப்படும். இதுவே சமூக நீதி. 

தற்போது கொரோனா வைரஸால் உலக நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகமும், இந்தியாவும் பல இழப்புகளை சந்தித்துள்ளது. வருமானம், வேலைவாய்ப்பு, நிம்மதி போன்றவை பறிபோயுள்ளது. இந்த நேரத்தில் நல்ல அரசு மக்களின் சுமையை குறைக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.1500 என்று வருடத்திற்கு ரூ.18000 மற்றும் ஆறு கேஸ் சிலிண்டர் வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இல்லத்தரசிகள் இதனை சிந்திக்க வேண்டும். 

நான் பொதுவாக இலவசத்தை எதிர்ப்பவன் என்பது உங்களுக்கே தெரியும். இந்த கொரோனா சூழ்நிலையால் அனைத்து திட்டத்தையும் நான் மனதார வரவேற்கிறேன். விவசாயிகளின் கடனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தள்ளுபடி செய்துள்ளார். இது கூட தெரியாமல் மு.க ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறுகிறார் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Dr Anbumani Ramadoss Confirm Every Caste Getting Reservation of Education and Employment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->