பாமக சார்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.! தயாரான மருத்துவர்கள்.!  - Seithipunal
Seithipunal


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை செய்வவதாக  தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. 

இதுகுறித்து வெளியான அறிகையில், " தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இம்மாதம் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு  தெரிவித்துள்ளது. 

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வரும் 15-ஆம் தேதி பரப்புரை மேற்கொள்கிறார்.

முன்னதாக பா.ம.க. இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வரும் 14-ஆம் தேதி திங்கட்கிழமை விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk announcement for campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->