உலகமே முன்னெடுக்கும் விஷயத்தினை தீவிரமாக கையிலெடுக்கும் டாக்டர் ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுக்க காலநிலை அவசரநிலையை அறிவிக்கக் கோரி பசுமைத் தாயகம் சார்பில் செப்டம்பர் 23 முதல் 29 வரை சென்னை பெருநகரம் முழுவதும் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் நடைபெறவுள்ளது.

இப்பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று (23.09.2019) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் இந்திய சுகாதார துறை அமைச்சர் அன்புமணி, பாமக தலைவர் கோ.க. மணி, ஏ.கே. மூர்த்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

23.09.2019 அன்று நியூயார்க் நகரில் புவிவெப்பமடைதல் பேராபத்தை தடுப்பதற்கான ஐநா சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசவுள்ளார். இந்த வாரம் முழுவதும் உலகெங்கும் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்கும் போராட்டங்களும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை முழுவது 23 இடங்களில் செப்டம்பர் 23 முதல் 29 வரை காலநிலை அவசரநிலை பிரச்சாரம் (Climate Emergency Campaign) நடைபெறுகிறது.

சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய வாயிலில் காலநிலை அவசரநிலை பிரகடனம் செய்ய வலியுறுத்தி, ராமதாஸ் மற்றும் மாநிலங்களவை எம்.பி. அன்புமணி இருவரும் பொதுமக்களுக்கு பாமக மற்றும் பசுமை தாயகம் சார்பில் பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை அளித்தும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், காலநிலை மாற்றத்தால் புவி அதிக அளவில் வெப்பமயமாகி வருவதாகவும், உடனடியாக அவசரநிலை பிரகடனம் செய்து குறைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை காலநிலை அவசரநிலை பிரகடனத்தை அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். 

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, காலநிலை அவசரநிலை பிரகடனம் வெளியிடுவது தொடர்பாக விரைவில் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவித்தர். தமிழகத்தில் இதுவரை 40 சதவீத மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது எனவும் அது பாமக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதுவதாகவும், பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் வரை அதற்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். 

உலகெங்கும் நடைபெறும் காலநிலை அவசரநிலை பிரச்சாரம் ஆனது சில மாதங்களாகவே பாமகவினரால் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு கட்சி மட்டும் செய்யக்கூடிய செயல் இல்லை என்பதனை உணர்ந்து மற்ற நாடுகளை போல பொதுமக்களும் பங்கெடுக்க வேண்டும், உலகத்தினை காப்பாற்றுவதற்கு இந்த விழிப்புணரவு பிரச்சாரத்தில் ஊடகங்களும் பங்கெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk and green motherland awareness program for Climate Emergency Campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->